வேந்தர் டிவியில் நடுவராக மார்க் போட வரும் நடிகை ஆன்டிரியா

By Mayura Akilan

சென்னை: வேந்தர் டிவியில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய இசை நிகழ்ச்சி வி - வாய்ஸ். இந்த நிகழ்ச்சியின் நடுவராக வந்து போட்டியாளர்களுக்கு மார்க் போடப் போகிறார் நடிகையும் பாடகியுமான ஆன்டிரியா.

திரைப்படத்தில் பிரபலங்களாக உள்ளவர்கள் தொலைக்காட்சிகளில் நடுவர்களாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் பங்கேற்று அந்த நிகழ்ச்சியை மேலும் பிரபலப்படுத்துகின்றனர். நடன நிகழ்ச்சிகளில் குஷ்பு, நமீதா, ராதா, அம்பிகா, பிரியாமணி ஆகியோர் நடுவர்களாக வந்துள்ளனர். அந்த வரிசையில் ஆன்டிரியாவும் வேந்தர் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்கிறார்.

அடுத்த தலைமுறைக்கான குரல் தேடல் என்னும் முனைப்போடு நடைப்பெறும் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில் புதிய வரலாறு படைக்கவிருக்கும் இந்த வி-வாய்ஸ் குரல் தேர்விற்காக ஆயிரக்கணக்கில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டனர்.

குரல் தேடல்

குரல் தேடல்

இந்த வி-வாய்ஸ் தொலைகாட்சி நேயர்களுக்கு புதிய இசை விருந்தாய் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

தமிழ்நாடு முழுவதும் 7மண்டகலாக பிரித்து குரல் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் குரல் தேர்வு நடத்தாத இடங்களில் கூட தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது அங்கெல்லாம் போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

வி.வாய்ஸ்

வி.வாய்ஸ்

ஒவ்வொரு மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அல்லது நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் வண்ணமயமான பிரமாண்டமான அரங்குகளில் முதல் சுற்றில் தேர்வானவர்களுக்கு இறுதிக்கட்ட போட்டிகள் நடைப்பெற்றுக்கொண்டிருகிறது .

பிரபல பாடகர்கள்

பிரபல பாடகர்கள்

இந்த நிகழ்ச்சியில் குரல் வளம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்காளாக பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா, பிரபல திரைப்பட நடிகை ஆன்ட்ரியா, பிரபல பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் போன்றோர் நடுவர்களாக இருந்து இந்நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்கின்றனர்.

வேந்தர் டிவியில் வி வாய்ஸ்

வேந்தர் டிவியில் வி வாய்ஸ்

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக P.சுசிலா கலந்து கொள்கிறார் இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த வி வாய்ஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X