ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்..அர்ச்சனாவின் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தை நடிகை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Raja Rani 2 சீரியலில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதுவும், இதில் ஒளிபரப்பாகும் சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்துபோக விஜய் டிவியில் பல சீரியல்கள் சீசன் 2வாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலின் சீசன் 2க்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.

ராஜா ராணி

ராஜா ராணி

ராஜா ராணி முதல் சீசனில் நாயகியாக நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்ஜீவ் இணைந்து நடித்திருந்தார்கள் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ஆலியா மானசா அந்த சீரியலை விட்டு விலகியதை அடுத்து ரியா விஸ்வநாத் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அர்ச்சனா விலகல்

அர்ச்சனா விலகல்

இதில் வில்லி ரோலில விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். ராஜா ராணி சீசன் 2 மூலம் தனது சீரியல் பயணத்தை தொடங்கிய அர்ச்சனா முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை வென்றார். மேலும் சிறந்த வில்லிக்கான விஜய் டிவியின் விருதையும் வென்றிருந்தார். ஆனால் தற்போது அர்ச்சனா திடீரென சீரியலை விட்டு விலகவுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இன்ஸ்டாவில் விளக்கம்

இன்ஸ்டாவில் விளக்கம்

இந்நிலையில் விஜே அர்ச்சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் சீரியலை விட்டு விலகும் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். அதில்,நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் நமக்கு புது ஆச்சரியத்தை தினசரி நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கும். என்னுடைய அடுத்தக்கட்டத்திற்கான திட்டமிடலை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஒட்டுமொத்த டீமிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புது பரிமாணத்தில் சந்திக்கிறேன்

புது பரிமாணத்தில் சந்திக்கிறேன்

இன்றைக்கு வரைக்கும் எனக்கு அன்பையும், ஆதரவையும் அளித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அனைவரையும் என் புது பரிமாணத்தில் சந்திக்கிறேன். லவ் யூ ஆல் எனப் பதிவிட்டிருக்கிறார். இதனால், வில்லி அர்ச்சனாவுக்காக சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

இனி இவர்தான்

இனி இவர்தான்

தற்போது ஆதியின் காதல் தொடர்பான எபிசோடுகள், அர்ச்சனாவின் வளைகாப்பு நிகழ்வுகள் என சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இனி அர்ச்சனாவின் ரோலில் ஈரமான ரோஜாவே சீரியலின் அர்ச்சனா குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X