சீரியல் நடிகை முகத்தில் குத்திய நடிகர்… வைரலாகும் வீடியோ !
சென்னை : பிரபல சீரியல் நடிகை முகத்தில் குத்துவாங்கி நிலை தடுமாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னடத்தில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி. இவருக்கு இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இறுதியில் இணைந்து தமிழில் தனது என்ட்ரியை கொடுத்தார் சைத்ரா ரெட்டி.

யாரடி நீ மோகினி
நடிகை சைத்ரா ரெட்டி ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடரான யாரடி நீ மோகினி தொடரில் நடித்து அசத்தினார். இந்த தொடரின் முக்கிய வில்லியான ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் சைத்ரா ரெட்டி. யாரடி நீ மோகினி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சில மாதங்களுக்கு முன் முடிந்தது.

கயல் தொடரில்
இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ள சைத்ரா ரெட்டி. சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு குடும்பத்தையே தாங்கிப்பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

முகத்தில் செம குத்து
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ரெட்டி, ஒரு ரீல் வீடியோவை எடுக்க முயற்சி செய்து கடைசியில் பங்கமாக முகத்தில் குத்துவாங்கி உள்ளார். சக நடிகரான அபினாஷுடன் வீடியோ ஒன்றை எடுக்கும் போது, அவினாசின் முழங்கை சைத்ராவின் கன்னத்தை பதம்பார்த்துவிட்டது. வீடியோவுக்காக அவர் போட்டிருந்த கூலிங் கிளாஸ் கழண்டுவிட முரண்டு போய்விட்டார் சைத்ரா. இந்த வீடியோவை டெலிட் செய்யாமல் அப்படியே அப்லோடு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன அடிரொம்ப பலமாக என கேட்டு வருகின்றனர்.
Recommended Video

வலிமை படத்தில்
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சூப்பராக வந்துள்ள இவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











