நடிகை எடுத்த திடீர் முடிவு.. கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகல்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்த சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வந்த நடிகை சீரியலில் இருந்து விலகி உள்ளார்.
இரண்டரை மணிநேரத்தில் முடிந்துவிடும் திரைப்படத்தை தாண்டி, தினமும் வீட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிதர்கள் இருக்கிறார்கள். தினமும் விதவிதமான கதைக்களத்துடன் வரும் தொடர்களை பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர் நம் இல்லத்தரசிகள். இப்படி சீரியலுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருவதால், பல தொலைக்காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்தை ஒளிபரப்பி வந்த நிலையில், அவற்றை கட் செய்து விட்டு, ஏழு நாளும் சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

கார்த்திகை தீபம் சீரியல் கதை: அப்படி ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் கார்த்திகை தீபம். இந்த தொடரில் கார்த்திக், தீபாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும், அபிராமிக்காக தீபா தாலியை கழட்டி வைத்ததால், தற்போது மீண்டும் திருமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், கார்த்திக்கை திருமணம் செய்ய ஆசைப்படும் ரம்யா, இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி கார்த்திக்கை அடைந்துவிட வேண்டும் என்று திட்டம் போடுகிறாள்.
ரம்யாவின் திட்டம்: இதற்காக ரம்யா, பரிகாரம் என்ற பெயரில் தீபாவை கொல்ல திட்டம் போடுகிறாள். ஆனால், அதை எப்படியோ கார்த்திக் தடுத்துவிட்டான். அதன் பின் தாலியை திருடுவது, முகூர்த்தப் புடவையை திருடுவது என ரம்யா, இவர்களின் திருமணத்தை நிறுத்த திட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறாள் மறுபக்கம், ரியா திருமணத்தை நிறுத்த திட்டம் போடுகிறாள், இதையெல்லாம் தாண்டி தீபா, கார்த்திக் திருமணம் எப்படி நடிக்கும் என்று தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

விலகினார்: இந்த நேரத்தில், இந்த தொடரில் அருணின் மனைவியான ஐஸ்வர்யா ரோலில் நடித்து வந்த நடிகை சீரியலிலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், அவர் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. தற்போது அந்த ரோலில், நடிகை சாந்தினி கமிட்டாகி உள்ளார். இந்த கதாபாத்திரம் மாற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஐஸ்வர்யா கதாபாத்திரமும் கிட்டத்தட்ட ஒரு வில்லி ரோல் தான், இதுவரை அந்த நடிகை அந்த ரோலில் சிறப்பாக நடித்து வந்த நிலையில், இனி சாந்தினி அந்த ரோலில் எப்படி நடிக்கிறார் என்று பார்க்கலாம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சாந்தினிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











