Don't Miss!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
அடுத்த தொடருக்கு தயாராகும் சாயா சிங்... கலர்ஸ் டிவியில ஒளிபரப்பாக இருக்கு!
சென்னை : அடுத்தடுத்த தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை சாயா சிங்.
அவரது நடிப்பில் கலர்ஸ் டிவியில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற புதிய தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.
சகோதரிகளின் பாசத்தையும் நேசத்தையும் காட்சிப்படுத்தும் முயற்சியாக இந்தத் தொடர் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திருமணம் விளையாட்டு அல்ல“… கணவரை பிரிந்த… பாலிவுட் நடிகை கண்ணீர் பேட்டி !

நடிகை சாயா சிங்
நடிகை சாயா சிங் தமிழில் திருடா திருடி படம் மூலம் தனுஷிற்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்த இவர், திருமணமாகி செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நெடுந்தொடர்களில் இவர் நடித்து வருகிறார்.

நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடர்
மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இது கதிர்வேலன் காதல் படத்திலும் நடித்துள்ளார். அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழரசன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது கலர்ஸ் டிவியில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் இவர் நடித்து வருகிறார். தினந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இந்திராணி கேரக்டரில் சாயா சிங்
இளம் வயதிலேயே பெற்றோரை பறிகொடுகும் இந்திராணி என்ற பெண் தலையில் குடும்ப பொறுப்புகள் விழும் நிலையில் அவர் அதில் எப்படி சிறப்பாக செயல்படுகிறார் என்பதை இந்த கதை சொல்கிறது. தன்னுடைய பெற்றோரின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்க்கையில் ஜெயிக்கும் பெண்ணாக இந்திராணி இருக்கிறார்.

சகோதரிகளுக்கு பாதுகாப்பு
இந்த கதாபாத்திரத்தில் சாயா சிங் நடித்துள்ளார். மேலும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக வளர்க்கவும் செய்கிறார் இந்திராணி. அப்பாவி என்ற நிலையிலிருந்து மனஉறுதி வாய்ந்த நிலைக்கு மாறும் அவரது வளர்ச்சி இந்த தொடரில் படிப்படியாக காட்டப்படுகிறது.

வில்லன் ராஜமாணிக்கம்
இவர்களது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் இவர்களின் மாமா ராஜமாணிக்கத்தை எதிர்த்து இவர்கள் வென்றார்களா என்பதை படம்பிடிக்கிறது நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடர். சகோதரிகளின் பாச உணர்வையும், நேசத்தையும் காட்சிப்படுத்துகிற மற்றும் உண்மையிலேயே கொண்டாடி மகிழ்கிற ஒரு தைரியமான முயற்சியாகவே இந்நெடுந்தொடர் இருக்கிறது என்று டிவியின் பிசினஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்களை கட்டிப்போடும்
இதனிடையே திரைக்கதையின் ஒவ்வொரு எபிசோடும், பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடியதாக இருக்கும் என்று தொடரின் இயக்குநர் ராஜா தனுஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆண்களுக்கு நிகரான திற கொண்டவர்களாக பெண்கள் உள்ளதை இந்த தொடர் சொல்ல முற்படுவதாக சாயா சிங் தெரிவித்துள்ளார்.

தனித்துவமான கதாபாத்திரம்
தன்னுடைய மற்ற கதாபாத்திரங்களை காட்டிலும் வேறுப்பட்டு தனித்துவமானதாக இந்த கதாபாத்திரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திராணி மற்றும் அவளது சகோதரிகளின் வழக்கத்திலிருந்து மாறுபட்ட வாழ்க்கைக் கதையை கண்டு ரசிக்க வரும் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.