2000, 3000 பிச்சையா போடுறீங்க.. நான் மட்டும் அந்த சீட்டுக்கு வந்தா? நடிகை தீபா விளாசல்!

சென்னை: சின்னத்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி தொடர்களில் நடித்து வெள்ளித்திரையில் கால்பதித்தவர் தான் நடிகை தீபா ஷங்கர். கடைக்குட்டி சிங்கம், டாக்டர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கு என்று தனி இடத்தை பெற்றுள்ளார். தற்போதை, இவர் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசியது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

நடிகை தீபா சங்கர்: மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை தீபா சங்கர், பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனே வாழ வேண்டும். கல்வி கற்றுவிட்டோம் என்கிற எண்ணத்தில் தலைக்கணத்தில் ஆடக்கூடாது, இன்றைய காலத்தில் பல பெண்கள் விட்டுக்கொடுக்காததால் தான் விவாகரத்து நடக்கிறது. அதற்காக, எல்லாத்தையும்விட்டு கொடுத்துவிட்டு குடும்பத்தில் நடக்கும் கொடுமையை பொருத்துக் கொண்டு இருக்கக்கூடாது. அதே போல பெற்றோர்களும், புகுந்த வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பெண்கள் சொல்லும் போது காதுகொடுத்து கேளுங்கள். அதை விட்டுவிட்டு அனுசரித்துப்போ என்று சொன்னால் கடைசியில் விபரீதம் தான் நடக்கும். விபரீதம் நடந்த பிறகு என் மகள் போய்ட்டாளே என மைக்கில் கதறி அழுவதில் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை என்றார்.

deepa shankar speech

விளாசிய தீபா: இது தொடர்ந்து நீங்கள் ஒருநாள் 'சிஎம்' ஆனா, பெண்களுக்காக என்ன செய்வீங்க, எந்த திட்டத்தில் கையெழுத்துப்போடுவீங்க என தொகுப்பாளினி சோபா கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த தீபா, நான் மட்டும் சிஎம் ஆனா முதலில் போடும் கையெழுத்து பெண்களின் கல்வி மேம்பாட்டிற்காக தான் இருக்கும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளை படித்துவிட்டால் அந்த குடும்பத்தையே உயர்த்தி விடுவாள். ஆண்களை விட பெண்கள் தான் முக்கியமாக கல்வி கற்க வேண்டும. இந்த சமுதாயம் மாறவேண்டும் என்றால் முதலில் கல்வியை பெண் பிள்ளைகளுக்கு தான் கொடுக்க வேண்டும். இதனால், நாள் பெண் பிள்ளைகள் எந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றாலும், கல்லூரிக்கு சென்றாலும் அவர்களுக்கு இலவச கல்வி கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 2000 ரூபாய் 3000 ரூபாய் என்ன பிச்சையா போடுறீங்க, கல்வியை கொடுத்தால் அவர்களே குடும்பத்திற்காக சம்பாதித்துக் கொள்வார்கள் என்றார். தற்போது தீபாவின் இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X