கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்.. ராதையாகவே மாறிய தர்ஷா குப்தா.. என்ன அழகு பாருங்க!
சென்னை : நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு பெரியத்திரைக்கு சென்றவர்களில் ஒருவர்.
இவருக்கு சின்னத்திரையில் நடித்த சீரியல்கள் மூலமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது தற்போதும் தொடர்ந்து வருகிறது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் அதில் இடும் பதிவுகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா.

நடிகை தர்ஷா குப்தா
கோயம்புத்தூரை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. தன்னுடைய கல்லூரி காலகட்டத்திலேயே மாடலிங்கில் கவனம் செலுத்தி அதன்மூலம் நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியல்களில்தான். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த முள்ளும் மலரும் ஷோ இவருக்கு எராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

யோகி பாபுவிற்கு ஜோடி
தொடர்ந்து மின்னலே, செந்தூரப் பூவே என சில சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் தர்ஷா குப்தா. தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமிடும் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் என்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதுமே கலர்புல்லாக இருக்கும். அந்த அளவிற்கு ஃபுல் எனர்ஜியோடு இவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்
இதையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின்போதும், ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் வகையிலும் இவரது வீடியோக்கள் காணப்படும். ஹோலியின்போதும் தான் கொண்டாடிய கலர்புல் ஹோலியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

ராதையாக மாறிய தர்ஷா குப்தா
இந்நிலையில் தற்போது நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தற்போது ராதையாகவே மாறி வீடியோ வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. பின்னணியில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான சினேகிதியே படத்தின் ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ என்ற பொருத்தமான பாடலையும் ஓடவிட்டுள்ளார்.

அழகான நடனம்
மேலும் ராதை அழகான காஸ்ட்யூமில் சிறப்பான நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் தர்ஷா குப்தா. இவரை பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை சில மணிநேரங்களிலேயே அள்ளித் தெளித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு சுதந்திர தினத்தையொட்டி இவர் கொடியுடன் புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications