கைவிட்ட கணவர்..கைக்குழந்தையுடன் படப்பிடிப்பில் திவ்யா ஸ்ரீதர்.. அர்னவை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
சென்னை : சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது இரண்டு மாத கைக் குழந்தையுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதைப் பார்த்து ரசிகர்கள் அர்னவை திட்டிதீர்த்து வருகின்றனர்.
கேளடி கண்மணி சீரியல் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திவ்யா ஸ்ரீதர்.
5 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யா ஸ்ரீதர் :
திருமணமான சில மாதத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் மீடியா முன் கதறி அழுதார். திவ்யாகொடுத்த புகாரின் பேரில் அர்னவ் கைது செய்யப்பட்டார்.
மறுத்த அர்னவ் :
இதையடுத்து, திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த அர்னவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று போட்டோ ஆதாரங்களை காட்டினார். நாங்கள் காதலித்தது சேர்ந்து வாழ்ந்தது எல்லாம் உண்மை தான். அவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பது எனக்குத் தெரியாது என்று இருந்தார்.

பெண் குழந்தை :
இதையடுத்து, திவ்யா ஸ்ரீதருக்கு இரண்டு மாதத்திற்கு முன அழகான பெண் குழந்தது. அந்தக் குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திவ்யா, நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, வலிமை நிபந்தனையற்றது. என்னில் நீங்கள் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றி, நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
கண்கலங்கிய அர்னவ் :
இதையடுத்து, அர்னவ் அளித்த பேட்டியில், யார் யாரோ குழந்தையை நான் தூக்கி வளர்த்து இருக்கிறேன். ஆனால் என் குழந்தையை இன்று தூக்க முடியவில்லை. நானே என் குடும்பத்தினரோ, குழந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்க மாட்டோம் ஆனால், திவ்யா வீடியோவில் குழந்தையை காட்டினால், நன்றாக இருக்கும் என்று பேசி இருந்தார்.
கைக்குழந்தையுடன் படப்பிடிப்பில் :
இந்நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் செவ்வந்தி சீரியல் படப்பிடிப்பிற்கு செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து பலர் வலிமையான பெண் என்றும், எல்லாத்தையும் உங்களால் சாதிக்க முடியும் என்று கருத்துக்களை கூறிவருகின்றனர். அதே நேரம் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு திவ்யாவை இந்த நிலைமைக்கு ஆக்கிய அர்னவை ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











