For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வெண்பா என்ட்ரி .. சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா!

    |

    சென்னை : பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் வெண்பாவின் ஆட்டம் ஆரம்பமாகி உள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது

    அனைவரின் மனம் கவர்ந்த இத்தொடர், இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றாக உள்ளது.

    1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த உள்ளம் உருகுதய்யா பாடல்! 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த உள்ளம் உருகுதய்யா பாடல்!

    பாரதி கண்ணம்மா

    பாரதி கண்ணம்மா

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.டிஆர்பியில் பீக்கில் இருந்த இந்த சீரியல் கடந்த இரண்டு மாதமாக 'டல்' அடித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது கண்ணம்மாவாக சீரியலின் லீட் ரோலில் நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலக்கியதும் வில்லியாக நடித்த டாக்டர் வெண்பா சீரியலில் இல்லாததும் தான்.

    ஆண் குழந்தை பிறந்தது

    ஆண் குழந்தை பிறந்தது

    வெண்பாவாக நடித்து வந்த பரீனா வயிற்றில் குழந்தையுடன் தொடர்ந்து பாரதி கண்ணம்மாவில் நடித்து வந்தார். பிரசவ காலம் நெருங்கியதை ஒட்டி வெண்பா சிறையிலேயே இருப்பது போல் கட்சியை படமாக்கப்பட்டு பரீனா சீரியலிருந்து சிறுது காலம் ஒதுங்கி இருந்தார். பரினாவுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    வெண்பா என்ட்ரி

    வெண்பா என்ட்ரி

    இந்நிலையில், வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்பது போல மீண்டும் என்ட்ரி ஆகி உள்ளார். சிறையிலிருந்து வெண்பா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.பாரதியும் கண்ணம்மாவும் தனி ஜாலியா இருக்கும் விஷயம் தெரிந்து வெண்பான டென்ஷன் ஆனார்.

    சண்டை தொடரும்

    சண்டை தொடரும்

    வெண்பா இல்லாமல் துவண்டு போன சீரியலை தூக்கி நிறுத்த பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகள், செல்ல சண்டைகள் என பாரதி கண்ணம்மா எபிசோடு கிளுகிளுப்பாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால், இனி வழக்கம்போல கண்ணம்மா vs வெண்பா சண்டை தொடர போகிறது டிஆர்பி ரேட்டிங் எகிறப்போகிறது.

    English summary
    Actress farina azad Re entry in Bharathi Kannamma Serial
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X