62 வயசிலும் BP, சுகர் இல்லை.. பொய்யை வெறுக்கிறேன்.. வாழ்க்கை ரகசியம் சொன்ன பாத்திமா பாபு!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் பாத்திமா பாபு. சினிமா மற்றும் சீரியல்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்தும் கவனம் பெற்ற இவர், தனது வாழ்க்கை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

அதில், "எனக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் ஒன்று இருந்தால் அது பொய் சொல்வது தான். நான் இதுவரை எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லியதே இல்லை. அதுபோல யாராவது என்னிடம் பொய் சொன்னார்கள் என்று தெரிந்துவிட்டால், அவர்கள் யார் என்றாலும் நேரடியாக சண்டை போடுவேன். ஒரு பெண் என்னிடம் பொய் சொன்னது தெரிய வந்ததும், நான் காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டு நேராக கிளம்பி விட்டேன். அந்த அளவுக்கு பொய்யை நான் வெறுக்கிறேன் என்றார்.

Fathima Babu interview
Photo Credit:

பாத்திமா பாபு: மேலும், தனது உடல்நலத்தைப் பற்றி பேசிய பாத்திமா பாபு. இப்போது எனக்கு 62 வயதாகிறது. என் வாழ்க்கையில் பெரிதாக உடல்நல பிரச்சினைகள் வந்ததே இல்லை. 10-ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா காலத்தில் சில பாதிப்புகள் வந்த. இந்த வயதிலும் பிபி, சுகர் என எதுவுமே இல்லை. இதற்கு காரணம், நான் எந்த கஷ்டத்தையும் மனதில் வைத்து கொண்டு கஷ்டப்பட்டமே இல்லை அது தான் என் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம்.

பேட்டி: இன்றைய இளம் தலைமுறையைப் பற்றி கருத்து தெரிவித்த பாத்திமா பாபு, இந்த காலத்து பசங்க, பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. எல்லாம் நமக்குத்தான் தெரியும் என்ற போக்கில் நடந்து கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் வளர்ந்த காலத்தில், 'என் அப்பாவைப் போல யாரும் வர முடியாது' என்று பெருமைப்பட்டோம். பெற்றோருக்கு மரியாதை கொடுப்பது மிக முக்கியம் என்றார். அதே போல இன்றைய டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான அட்வைசையும் நாம் கொடுத்தாலும், அவர்களுக்கு அதைபுரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை, இதனால் அவர்களே வாழ்க்கையில் பட்டு பலவிஷயத்தை தெரிந்து கொண்டாம் மட்டும் தான் வாழ்கை என்ன என்பது தெரியும் என பாத்திமா பாபு பேட்டியில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவரிதன் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Read more about: fathima babu interview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X