உழைப்புக்கு கிடைத்த பரிசு… கிறிஸ்துமஸ் தினத்தில் புதிய கார் வாங்கிய கேப்ரில்லா.. விலை என்ன தெரியுமா?

சென்னை: 'சுந்தரி' சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடத்தை பிடித்த நடிகை கேப்ரியல்லா, கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக, புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதை சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

நடிகை கேப்ரியல்லா வாங்கியுள்ள கார் Suzuki நிறுவனத்தின் "Prazeres" மாடல் ஆகும். இந்த காரின் சென்னை சந்தை மதிப்பு சுமார் 9.77 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அம்மாச்சி எனக்கு கொடுத்த பரிசு" என நெகிழ்ச்சியான குறிப்பையும் பதிவிட்டுள்ளார். கேப்ரியல்லாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு", "மேலும் உயரங்களை எட்ட வாழ்த்துகள்" போன்ற கருத்துகள் பதிவுகளின் கீழ் குவிந்து வருகின்றன.

Sundari serial gabriella sellus car
Photo Credit:

நடிகை கேப்ரில்லா: விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனி ஆளாக கலந்து கொண்டு தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். சின்னத்திரை, சோசியல் மீடியாவில் மட்டும் தலைகாட்டி வந்த கேப்ரியல்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படத்திலும் சின்ன ரோலில் நடித்தார்.

குவியும் வாழ்த்து: இதையடுத்து, சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. அதில், கேப்ரில்லா நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். சீரியல், நடிப்பும், எளிமையான அணுகுமுறையும் கொண்ட கேப்ரியல்லா, தனது வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதால், அவர்களின் மனதில் மேலும் நெருக்கமாக இடம்பிடித்து வருகிறார். இந்த புதிய கார் வாங்கியது, அவரது வாழ்க்கை பயணத்தில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X