சொகுசு கார் வாங்கிய நடிகை கேப்ரியல்லா.. மிரள வைக்கும் காரின் விலை!
சென்னை: சின்னத்திரையில் 'சுந்தரி' சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த நடிகை கேப்ரியல்லா செல்லஸ், தனது கடின உழைப்பால் தற்போது புத்தம் புதிய Kia Carens Facelift சொகுசு காரை வாங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு ஷோவில் தொடங்கி இன்று சொந்தமாக ஆடம்பர கார் வாங்கும் உயரத்திற்கு வந்துள்ள கேப்ரியல்லாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேப்ரியல்லா செல்லஸ்: விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனி ஆளாக வந்து ஸ்டாண்ட் ஆப் கமெடியில் தொகுப்பாளினி டிடி போல பேசி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கேப்ரியல்லா செல்லஸ். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பினாலும், அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்கு பிடித்து வந்தார். அதன் பின் தனது திறமையால், டிக் டாக்கில் அழகான குடும்ப உறவுகள், பாசம், காதல் பற்றி கருத்துள்ள கவிதையை வீடியோவாக பதிவிட்டு பெயர் எடுத்தார்.

பிஸியான நடிகை: சின்னத்திரை மற்றும் சோசியல் மீடியாவில் மட்டும் தலைகாட்டி வந்த கேப்ரியல்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படத்திலும் சின்ன ரோலில் நடித்தார். அதன் பின் தான் சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கதைக்கு பொருத்தமாக இருந்த கேப்ரில்லா, தனது அசாத்தியமான நடிப்பால் பெயர் எடுத்து இன்று பிஸியான நடிகையாக இருக்கிறார்.

சொகுசு கார்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரிலா இன்ஸ்டாகிராமில் Kia Carens Facelift சொகுசு ரக காரை வாங்கி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். 7 சீட்டுடன் பல அம்சங்கள் கொண்ட இந்த காரின் ஆரம்ப விலை தோராயமாக ₹10.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடலான ஆடம்பர வேரியன்ட்டின் விலை சென்னையில் அனைத்து வரிகள் மற்றும் இன்சூரன்ஸ் உட்பட தோராயமாக ₹20 லட்சம் முதல் ₹23 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உருவ கேலிகளைத் தாண்டி, இன்று தன் சொந்த உழைப்பில் ₹20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ள கேப்ரியல்லாவின் வளர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications