Gabriella :உடல் எடையை அதிகரிக்க சீரியல் நடிகை கேப்ரியல்லா செஞ்சது என்னன்னு பார்க்கலாங்களா!
சென்னை : விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகை கேப்ரியல்லா.
இவர் தற்போது ஈரமான ரோஜாவே 2 தொடரில் காவ்யாவாக நடித்து வருகிறார். கணவனின் அன்பிற்காக ஏங்கும் கேரக்டரில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் நடிகை கேப்ரியல்லா. இவரது அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கேப்ரியல்லாவின் வெயிட் கெயின் உணவு பழக்கம் :நடிகை கேப்ரியல்லா குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார். 7சி என்ற தொடரில் சிறுவயதாக இருந்தபோதே நடித்துள்ளார். இதேபோல தனுஷ் -ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி இவரை இவரை ஏராளமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் காவ்யா என்ற கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். ஜீவாவை காதலித்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவரது அண்ணன் பார்த்தியை திருமணம் செய்யும் காவ்யா, அதன்மூலம் ஏற்படும் மன உளைச்சல்களையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தொடரின் மூலமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது இவர் கர்ப்பமாவதாக காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. இதனால், இவரது கர்ப்பம் குறித்த தகவலால் குடும்பத்தினர், எவ்வாறு ரியாக்ட் செய்கிறார்கள் என்பதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன. பார்த்தியுடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், தற்போது, காவ்யாவின் கர்ப்பம் அவருக்கும் பார்த்திக்கும் எந்த மாதிரியான சூழலை ஏற்படுத்தும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறுவயதில் இருந்தே மிகவும் ஒல்லியாக காணப்பட்டார் கேப்ரியல்லா. ஒருகட்டத்தில் இவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துதான் களத்தில் இறங்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் ஜிம்மில் சேர்ந்த இவர், வொர்க்அவுட் செய்ததுடன், தன்னுடைய ட்ரெயினர் சொன்ன உணவு வகைகளையும் சரியாக எடுத்துக் கொண்டு தன்னுடைய உடல் எடையை ஏற்றியுள்ளார். தினமும் காலையில் 4 வேகவைத்த முட்டைகளையும் 10 மணியளவில் இட்லியும் சாப்பிடுவாராம் கேப்ரியல்லா. இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து 11 மணிக்கு பழங்கள், மதியம் மீல்ஸ் நான்-வெஜ்ஜுடன் வயிறு நிரம்பும்வரையில் சாப்பிடுவாராம். இதன்மூலம் தனக்கு தேவையான ப்ரோட்டீன் அதிகமாக கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மாலை 6 மணியளவில் வாழைப்பழம், நட்ஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து திக்கான மில்க்ஷேக்கையும் எடுத்துக் கொள்வாராம். இதன்மூலம் அவர் தனது உடல்எடையை கணிசமான அளவில் ஏற்றியுள்ளார். தற்போது ஹீரோயினுக்கான லுக்கிற்கும் இந்த எடை ஏற்றம் அவருக்கு உதவியாக உள்ளது


Click it and Unblock the Notifications











