Pandian stores 2: நாளை முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.. மீண்டும் மீனா கேரக்டரில் ஹேமா.. அட!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்துவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நேற்றைய தினத்துடன் எண்ட் கார்ட் போட்டுவிட்டது.

கடந்த 2018ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தன்னுடைய பயணத்தை துவங்கிய இந்தத் தொடர் 5 ஆண்டுகளை தொடர்ந்து நேற்றைய தினம் நிறைவு பெற்றுள்ளது.

Actress Hema going to join Pandian Stores 2 serial as Meena

இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் நாளை முதல் அதே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்தும் அடுத்தடுத்த அப்டேட்களை சேனல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நேற்றைய தினம் எண்ட் கார்ட் போட்டுள்ளது. அண்ணன் -தம்பிகளின் பாசம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாக கொண்டு கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்துவந்த இந்த சீரியல் தற்போது 5 ஆண்டுகளை கடந்த நிலையில் நிறைவடைந்துள்ளது.

வில்லன்களான சூழ்நிலைகள்: இந்தக் சீரியலில் தொடர்ந்து சூழ்நிலைகளையே வில்லன்களாக்கியிருந்தார் இயக்குநர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இறுதிக்கட்டத்தில் வில்லனாக பிரஷாந்தை மட்டுமே அவர் நிலைநிறுத்தியிருந்தார். நான்கு அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஒற்றுமையே இந்தத் தொடரின் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, பிரச்சினைகளின் போது கைக்கொடுத்து உறுதியாக நின்றதையும் பார்க்க முடிந்தது.

Actress Hema going to join Pandian Stores 2 serial as Meena

5 ஆண்டு பயணம்: கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது 5 ஆண்டுகளை கடந்து அக்டோபர் மாதத்திலேயே நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இந்த தொடரின் இரண்டாவது பாகமும் அக்டோபர் மாதத்திலேயே அதாவது நாளைய தினம் தன்னுடைய பயணத்தை துவங்கவுள்ளது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்ட இயக்குநர், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை மையமாக எடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது சீசன்: இந்த இரண்டாவது சீசனுக்கான ப்ரமோக்கள் கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்த ப்ரமோக்களும் ரசிகர்களை கவரும் வகையில் வெளியானது. இரண்டாவது சீசனின் கதைக்களம் முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் மூர்த்தியாக ஸ்டாலினே நடிக்க, தனமாக நடிகை நிரோஷா கமிட்டாகியுள்ளார்.

Actress Hema going to join Pandian Stores 2 serial as Meena

மீண்டும் மீனாவாக நடிக்கும் ஹேமா: மேலும் இந்த தொடரில் அவரது மகன்கள், மகள்கள் என களைகட்டும் ப்ரமோக்கள் வெளியிடப்பட்டன. இந்த தொடரில் முதல் சீசனில் மீனாவாக நடித்திருந்த ஹேமா நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், உறுதியானால் அறிவிப்பதாக ஹேமா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இந்த தொடரிலும் மீனாவாகவே களமிறங்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். முந்தைய சீசனிலிருந்து இந்த சீசன் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கேரக்டர் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள தற்போது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X