உனக்கெல்லாம் அசிங்கமா இல்ல? கயல் சீரியல் நடிகை தற்கொலை.. சிரிச்சி சிரிச்சி பேட்டி கொடுத்த நடிகை!

சென்னை: ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த நடிகை சுபாஷினி சுப்பிரமணியம் பெங்களூரில் தனது கணவர் பிப்பினுடன் வசித்து வந்த நிலையில், கயல் சீரியல் படப்பிடிப்புக்காக சென்னையில் தங்கி இருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகையின் தற்கொலை குறித்து அவருடன் நடித்த சக நடிகையான ஹென்ஷா தீபன் IBC Mangai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடிகை சுபாஷினி ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப்ரல் 6ந் தேதி) கணவர் பிப்பினுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியதால், மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை சுபாஷினி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். நடிகை சுபாஷினியின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.

Kayal serial Hensha deepan

நடிகை ஹென்ஷா தீபன்: நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், நடிகை ஹென்ஷா தீபன் அளித்து இருக்கும் பேட்டியில், சுபாஷினி இறந்தது எனக்கு முதலில் தெரியவே தெரியாது. நான் போனை ஆஃப் செய்து வைத்து வீட்டில் இருந்தேன். திடீரென்று போனை ஆன் செய்தபோது தான் இந்த விஷயம் எனக்கு தெரிந்தது. கயல் சீரியலில் நடித்த பலரும் இன்ஸ்டாகிராமில் இதை பற்றி பதிவு செய்திருந்தார்கள். அதை பார்த்த பிறகுதான் உண்மை நிலை புரிந்தது. கயல் சீரியல் ஆரம்பமான காலத்தில், நாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். அதனால் இந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் போல்டானவர், அவரின் பேச்சு, நடை, உடை எல்லாத்திலும் ஒரு ஸ்டைல் இருக்கும் அப்படி இருந்தவர் தற்கொலை செய்து கொண்டாது உங்களுக்கு எப்படி அதிர்ச்சியாக இருக்கிறதோ அதேப்போலத்தான் எனக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

மரணத்திலும் சிரிப்பா: எந்த பிரச்சனைய இருந்தாலும், நமக்கு நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. அதை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அப்படி நினைத்தால் இந்த உலகத்தில் யாருமே உயிருடன் இருக்க முடியாது என்று ஹென்ஷா தீபன்பேசி உள்ளார். நடிகை தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் அந்த கருத்துகளை அவர் சிரித்துக்கொண்டே பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலாகிய இருக்கும் நிலையில், பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "ஒருவரின் மரண விஷயத்தை எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாதா? நடிகையாக இருக்கும் உங்களுக்கு இதுகூடவா தெரியாது, மரண செய்தியிலும் சிரித்துக் கொண்டு பேசுவது சரியா? இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா இல்லையா என கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X