நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது.. நிறைமாத கர்ப்பிணியாக இந்திரஜா கர்ப்பகால புகைப்படங்கள்!

சென்னை: நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கரும் விஜய்யுடன் தெறி படத்தில் இணைந்து நடித்தவர். தொடர்ந்து சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாஸ் காட்டிவந்த இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் நடந்தது. சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தையொட்டி கார்த்திக் மற்றும் இந்திரஜா இருவரும் இணைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக அடுத்தடுத்த போஸ்ட்களை போட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்திரஜா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

indraja shankar karthick

இந்திரஜா -கார்த்திக் திருமணம்: நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரையில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்தவர். தொடர்ந்து சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு இவரது உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து தன்னுடைய குடும்பத்தினர் உதவியுடன் மீண்டுள்ள ரோபோ ஷங்கர் கடந்த ஆண்டில் தன்னுடைய மகள் இந்திரஜா சங்கருக்கும் திருமணம் நடத்தி முடித்துள்ளார். சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் சூழ மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்து முடிந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: தன்னுடைய உறவினர் கார்த்திக்கை இந்திரஜா திருமணம் செய்துள்ளார். முன்னதாக விஜய்யுடன் தெறி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள இந்திரஜா, பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் கார்த்திக்குடன் இணைந்து இவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் இந்த ஜோடி அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்களில் அவ்வப்போது ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவியும் பங்கேற்று வந்தனர்.

indraja shankar karthick

இந்திரஜா சங்கர் கர்ப்பம்: இந்நிலையில் இந்திரஜா சங்கர் கர்ப்பமாகியுள்ளார். சமீபத்தில் இவருக்கு வளைகாப்பையும் ரோபோ சங்கர் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். திருமணத்தை போலவே இந்த நிகழ்ச்சியும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. கர்ப்பமாக இருந்தாலும் தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கார்த்திக் மற்றும் இந்திரஜாவின் அடுத்தடுத்த காமெடி ரீல்ஸ்கள் இவருக்கு ஏறக்குறைய 8 லட்சம் பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் கொடுத்துள்ளது.

indraja shankar karthick

கர்ப்பகால போட்டோஷுட்: இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இந்திரஜா தன்னுடைய கணவர் கார்த்திக்குடன் இணைந்து போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் கமல்ஹாசனின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். நாம் வாழும் வாழ்க்கைக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி என்ற பாடல் வரிகளுடன் அடுத்தடுத்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ள நிலையில், தாய்மையின் பூரிப்பு அவரது முகத்தில் காணப்படுவதாக ரசிகர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X