டைட்டில் அடிக்கனும்ங்கற ஆசை பொண்ணு பாசத்த மறைச்சிடுச்சி.. முன்னாள் கணவருக்காக சேரனை விளாசும் நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் சேரன் மீது கோபத்தை காட்டியுள்ளளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் காஜல். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றிருக்கும் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடாக விவாகரத்து பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 2 முடிந்த பிறகு நடன இயக்குநரான சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

வறுத்தெடுக்கும் காஜல்
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியை சப்போர்ட் செய்துவரும் காஜல், சாண்டிக்கு பிடிக்காதவர்களை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்.

சாண்டிக்கு பிடித்தால்
யார் பக்கம் நியாம் இருக்கிறது என்று கூட பார்க்காமல் சாண்டிக்கு பிடிக்காவிட்டால் அவர்களை விமர்சித்தும் கேவலப்படுத்தியும் டிவிட்டி வருகிறார் காஜல். அதேபோல் சாண்டிக்கு பிடித்துவிட்டால் போதும் கண்ணை மூடிக்கொண்டு அந்த நபர் என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களை சப்போர்ட் செய்கிறார்.

கவினுக்கு சப்போர்ட்
அந்த வகையில் கவின் நான்கு பெண்களை காதலிப்பது போல் நடிச்சதில் தப்பே இல்லை என்றார் காஜல். இதேபோல் சாண்டிக்கு பிடித்தவர்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார் காஜல்.
பொண்ணு பாசத்த மறைச்சிடுச்சி
சாண்டிக்கு சேரனை பிடிக்காது என்பதால் சேரனுக்கு எதிராக டிவிட்டியிருக்கிறார் காஜல். சேரனை லாஸ்லியா நாமினேட் செய்தது தொடர்பாக காதல் கண்ணை மறைத்துவிட்டது என்று ஒரு ரசிகர் பதிவிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள, காஜல் டைட்டில் அடிக்கனும்ற ஆசை பொண்ணு பாசத்த மறைச்சிடுச்சி என்று பதிவிட்டிருக்கிறார்.
கஷ்டமாதானே இருக்கும்
மேலும் லாஸ்லியா தற்போது சாண்டியின் கேங்கில் இருப்பதால் அவரை ஆதரித்தும் டிவிட்டியிருக்கறார் காஜல். அதாவது, லாஸ்லியா ரொம்ப காயப்பட்டிருக்கிறார் போல, வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ்க்காக அவர் லாஸ்லியாவின் பெயரை தொடர்ந்து சொல்லியிருக்கிறார். ரெண்டுவாட்டி ஜெயிலுக்கு போறதக்கு யார் காரணமா இருந்தாலும் ஏத்துக்கலாம், அப்பா சொன்னா கஷ்டமாதானே இருக்கும். என்று பதிவிட்டிருக்கிறார் காஜல்.


Click it and Unblock the Notifications











