அவர அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல இவங்கள வெளியே அனுப்புற வழிய பாருங்க.. ஆர்மியை உசுப்பும் நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அந்த ஒரு போட்டியாளரை வெளியே அனுப்ப வேண்டும் என்று நடிகை காஜல் ஆர்மியினரை உசுப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை காஜல் தொடர்ந்து டிவிட்டி வருகிறார். சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல், முழுக்க முழுக்க கவினையும் சாண்டியையும் ஆதரித்து வருகிறார்.
கவின் ஆர்மி சாண்டி ஆர்மி என எல்லோரையும் டேக் செய்து அவர்களுக்கு ஆதரவாக டிவிட்டி வருகிறார். ஆரம்பத்தில் பொதுவாக கருத்து தெரிவித்து வந்த காஜல் தற்போது, சாண்டி கவின், லாஸ்லியாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

யாரை அனுப்பனும்
அவர்களுக்கு ஆதரவாக வனிதா, ஷெரின், சேரன் என அனைவரையும் சாடி டிவிட்டி வருகிறார் காஜல். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்த சார்ட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள காஜல், நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களில் ஒரு நபரை இந்த வாரமே வெளியே அனுப்ப வேண்டும் என்று ஆர்மியினரை உசுப்பிவிட்டுள்ளார்.
ஷெரினை அனுப்புங்கள்
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சேரப்பா கூட வாரா வாரம் நாமினேஷன்ல வருவாரு ஆனா ஷெரின் இப்ப அனுப்பலன்னா அதுக்கு அப்புறம் அவங்கள வெளிய அனுப்புறது கஷ்டம். ரியல் ஸ்மார்ட் பிளேயர்.. என்று ஷெரினுக்கு ஓட்டுப்போடாமல் அவரை வெளியே அனுப்புங்கள். சேரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று ஆர்மியினரை இன்டைரக்ட்டாக உசுப்பியுள்ளார் காஜல
விடமாட்டான் விடமாட்டான்
மேலும் வனிதாவை கிண்டலடித்து பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில் வனிதாவுக்கு யாரும் நல்லா இருக்க கூடாது என்றும், அது எப்படி மத்தவங்க நல்லா இருக்கலாம்.. விட மாட்டான் விடமாட்டான் என்றும் டிவிட்டியிருக்கிறார் காஜல்.
நைனாவுக்கு அவார்டு
மற்றொரு டிவிட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோவை ஷேர் செய்துள்ள காஜல், மோகன் வைத்யாவை விளாசியிருக்கிறார். அதில், நான் ஒத்துக்கல, உங்க தன்னடக்கம் புரியுது, உங்களுக்கே நீங்க அவார்டு கொடுக்க முடியாது. நாங்க தர்றோம், கூச்சப்படாம வாங்கிக்கோங்க. பச்சோந்தி அவார்டு கோஸ் டு நைனா, பெரிய கைதட்டல்களை கொடுங்கள் இந்த தகுதியான இரண்டு போட்டியாளர்களுக்கும். என்று பதிவிட்டிருக்கிறார் காஜல்.


Click it and Unblock the Notifications











