அவ்வா.. அவ்வா... உண்மையில் நடந்தது என்ன? சாக்ஷியை தோலுரித்து வீடியோ வெளியிட்ட நடிகை!
Recommended Video
சென்னை: கவின் சாக்ஷி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த வீடியோவை அவ்வா அவ்வா என சாக்ஷியை கிண்டலடித்து வெளியிட்டிருக்கிறார் நடிகை காஜல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி அகர்வாலும் கவினும் காதலித்தனர். பின்னர் கவின் லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டவே அவரை விட்டு விலகினார் சாக்ஷி.
இதைத்தொடர்ந்து எவிக்ஷன் முறையில் சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் கவின், சாக்ஷி தனது விளையாட்டை சீரியஸாக எடுத்துக்கொண்டார் என கூறினார்.

யார் புரபோஸ் பண்ணது?
தான் உண்மையிலேயே சீரியஸாக லாஸ்லியாவை காதலிப்பதாக மறைமுகமாக கூறினார். இதைத்தொடர்ந்து சாக்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் யார் முதலில் புரபோஸ் பண்ணது, யார் கல்யாணம் வரை பேசினது? யார் கேம் ஆடினது என்பது தெளிவாக வேண்டும் என்றார்.

லாஸ்லியாவுக்கு தெரியும்
மேலும் லாஸ்லியாவுக்கு தனக்கும் கவினுக்கும் இடையே இருந்த காதல் தெரியும், லாஸ்லியா தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியது பொய், தான் ஜெயிலில் இருக்கும்போதே எல்லாவற்றையும் அவரிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

வைரல் வீடியோ
மேலும் பெண்கள் என்ன அடிக்கடி மாற்றி போட டிரெஸா என்றும் கவினிடம் கேள்வி எழுப்பிருந்தார் சாக்ஷி. சாக்ஷியின் இந்த வீடியோ வைரலானது.
சொல்லவில்லை
இந்நிலையில் அந்த வீடியோவில் சாக்ஷி கேட்ட கேள்விகளுக்கு நடந்த வீடியோ காட்சிகளை மிக்ஸ் செய்து கவின் ஆர்மியினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசும்போது கவின் தன்னை காதலிப்பதாக கூறவில்லை என முகெனிடம் கூறுகிறார் சாக்ஷி.

கவின் சொன்ன உண்மை
பின்னர் தன்னிடம் கவின் எந்த உரிமையில் கத்தினார் என்ற கேள்விக்கும் கவின் பதிலளித்த காட்சியும் அதில் உள்ளது. அதாவது, நீ என்னிடம் கத்தலாம் அதற்கான உரிமை உனக்கு உள்ளது என சாக்ஷி தன்னிடம் கூறியதாக அவருக்கு முன்பே கவின் கூறுவதாக உள்ளது.

காதல் இல்லை
இதைத்தொடர்ந்து ஜெயிலில் இருக்கும் சாக்ஷி, தனக்கும் கவினுக்கும் இடையில் இருப்பது காதல் இல்லை என்று லாஸ்லியாவிடம் கூறுகிறார். மேலும் முதல் நாளில் இருந்தே கவினை தனக்கு பிடிக்கும் ஆனால் அது காதல் இல்லை என்றும் லாஸ்லியாவிடம் கூறுகிறார் சாக்ஷி.

அவ்வா அவ்வா
இந்த மிக்ஸ் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வா அவ்வா என கிண்டலடித்து ஷேர் செய்துள்ளார் நடிகை காஜல். சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல், கவின் சாண்டியின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கும் பெரும் ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











