பின்றீயே பாப்பா.. மதுமிதாவை அசிங்கப்படுத்திய லாஸ்லியாவை புகழும் நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா மதுமிதாவிடம் சண்டை போடுவதை நடிகை காஜல் புகழுந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியின் முன்னாள் மனைவியுமான நடிகை காஜல் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது டிவிட்டி வருகிறார்.
முன்னாள் கணவராக இருந்தாலும் கூட சாண்டிக்குதான் ஆதரவு தெரிவித்து வருகிறார். சாண்டி என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சரி என்கிறார் காஜல்.

முன்னாள் கணவரின் நண்பர்
கவின் நான்கு பெண்களை காதலிப்பது போல் நடிச்சது கூட சரிதான், அதில் தவறில்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். சாண்டியின் நண்பர் கவின் என்பதாலேயே அவர் செய்யும் தவறை கூட சரிதான் என்றார் காஜல்.

வாங்கிக்கட்டும் காஜல்
இதற்காக அவரது ரசிகர்களே அவரை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் லாஸ்லியா மதுமிதாவிடம் சண்டை போடுவது காண்பிக்கப்பட்டது.

மதுவிடம் சண்டை
தற்போது சாண்டி, கவின், தர்ஷன், முகென், லாஸ்லியா என ஐந்து பேரும் தனி கேங்காக இருப்பதால் குதூகலமாகியிருக்கிறார் காஜல். இன்று வெளியான புரமோவில் கவினிடம் வாக்குவாதம் செய்த மதுமிதாவிடம் கண்டைபோட்டார் லாஸ்லியா.

ரீடிவிட், டிவிட்
இத்தனை நாள் வேற்று கிரகத்துலயா இருந்தீங்க என மதுமிதாவை கேட்ட லாஸ்லியா பயங்கர ஆட்டிட்யூடுடன் வேகமாக நடந்து செல்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள காஜல் உடனே அந்த புரமோவை ரீடிவிட் செய்து தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
பின்றீயே பாப்பா
அதாவது, ஹாஹா என சிரிக்கும் ஈமோஜியை போட்டுள்ள காஜல், லாஸ்லியா கூறிய வேற்றுக்கிரகத்துலயா இருந்தீங்க என்ற வார்த்தையை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் பின்றீயே பாப்பா என்றும் புகழ்ந்து பதிவிட்டிருக்கிறார் காஜல்
இது எந்த கிரகம்?
காஜலின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் இது எந்த கிரகம் என லாஸ்லியாவின் படத்தை போட்டு கலாய்த்து டிவிட்டியிருக்கின்றனர்.
மதுமிதா கெத்து
மேலும் லூஸ்லியா இத்தனை நாள் கோமால இருந்தாங்களா என்றும் முதலில் நில்லுங்கள். மதுமிதா கெத்தா நிக்கிறாங்க அதுக்கே தில்லு வேணும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











