கவினுக்கு கடிதம் எழுதிய சேரன்.. பொங்கிய நடிகை.. கமலையே கேள்வி கேட்டு விளாசல்!
Recommended Video
சென்னை: லாஸ்லியா உடனான காதல் குறித்து கவினுக்கு சேரன் கடிதம் எழுதியது தொடர்பாக நடிகை ஒருவர் கமலை சாடியிருக்கிறார்.
நேற்று முன்தினம் கவின் லாஸ்லியாவிடம் தன் மீதான காதலை உறுதிபடுத்துமாறு வற்புறுத்தினார். ஆனால் லாஸ்லியா வெளியே போய் பேசிக்கொள்ளலாம், இங்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் விடாத கவின் நாலு லெட்டர் வார்த்தை தானே என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனை சீக்ரெட் ரூமில் இருந்து கவனித்த சேரன், அப்போதே மக்களுக்கு இதுகுறித்து எடுத்துக்கூறினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கவினுக்கு கடிதம் எழுதினார்.

கவனம் செலுத்துங்கள்
அதில் அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன், இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம், இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினேன்.

நியாயமா கவின்?
அப்படி இருந்தும் லாஸ்லியாவை இங்கேயே காதலை சொல்ல சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா? செலிபிரேட் பண்ணலாம் என்று நீங்கள் அவரை திங் பண்ணுவது ரொம்ப தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா? என்று கேட்டிருந்தார்.
பர்சனல் இல்லையா ஆண்டவரே?
இந்நிலையில் அந்தக் கடிதம் தொடர்பாக, நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் கமலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கவின் லாஸ்லியப காதல் விவகாரம் பர்சனல் இல்லையா ஆண்டவரே? உங்க வார்த்தைகளை எப்படி சேரப்பா மறக்கலாம்? என்று டிவிட்டியுள்ளார்.

நம் மூக்குதான் உடையும்
தர்ஷன் - ஷெரின் உறவு விவகாரத்தில் வனிதாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வறுத்தெடுத்தார் கமல்ஹாசன். அடுத்தவர் பர்சனல் விவகாரத்தில் நுழைந்தால் நம் மூக்குதான் உடையும் என்று கூறினார்.

கோர்த்துவிட்ட நடிகை
இந்நிலையில் அதனை கமலுக்கு நினைவுபடுத்தும் வகையில் அது மட்டும் பர்சனல் இல்லையா என கேட்டதோடு, அதை எப்படி சேரன் மறக்கலாம் என்றும் கேட்டு இருவரையும் கோர்த்துவிட்டுள்ளார் காஜல். கவினுக்கும் சாண்டிக்கும் சப்போர்ட் செய்து வரும் காஜல், சேரனை அடிக்கடி சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











