மரியாதையை பத்தி நீ பேசக்கூடாது.. வனிதாவை வச்சு செய்யும் சாண்டியின் எக்ஸ் வொய்ஃப்!

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 73 : Mugen imitating vanitha

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் வனிதாவை முன்னாள் போட்டியாளரும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் வச்சு செய்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் நுழைந்தார். மீண்டும் வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை.

நாள்தோறும் ஒரு சண்டை, பஞ்சாயத்து என களைகட்டியுள்ளது. வனிதாவின் நெருங்கிய தோழியான சாக்ஷி வெளியேற காரணமாக இருந்தவர் கவின்.

வார்த்தை போர்

வார்த்தை போர்

இதனால் கவின் மீது கடும் கோபத்தில் உள்ளார் வனிதா. சந்து கிடைக்கும் போதெல்லாம் சிந்து பாடி வருகிறார் வனிதா. இதன்காரணமாக வனிதாவுக்கும் கவின் அன்ட் கோவுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

கவின் செய்வதுதான் சரி

கவின் செய்வதுதான் சரி

இந்நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் தொடர்ந்து கவினுக்கும் சாண்டிக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கவின் அன்ட் கோ செய்வது மட்டும்தான் சரி என்று கூறி வருகிறார.

சேரனையும் சாடும் காஜல்

சேரனையும் சாடும் காஜல்

சாண்டி முன்னாள் கணவர், கவின் அவரது நண்பர் என்பதற்காக காஜல் அவர்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார். இதற்காக சேரன் உட்பட அனைவரையும் சாடி வருகிறார் காஜல்.

வம்புக்கு இழுக்கும் காஜல்

அந்த வகையில் கவின் அன்ட் கோவுடன் நான்சிங்கில் உள்ள வனிதாவை வச்சு செய்துள்ளார். மஞ்சுளா விஜயக்குமார் உயிரோடு இருக்கும்போது வனிதாவை திட்டி பிரஸ் மீட்டு கொடுத்த வீடியோவை காலையிலேயே தனது பேஜில் அப்லோடு செய்து வனிதா ஆர்மியினரை வம்புக்கு இழுத்தார்.

மரியாதை இல்லை

மரியாதை இல்லை

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் ஷெரின், லாஸ்லியா ரொம்பவும் அரோகென்ட்டாக நடந்துகொள்வதாகவும் ஆட்டிட்யூட் காட்டுவதாகவும் கூறினார். அப்போது லாஸ்லியா சாரி கேட்க, இந்த வீட்டில் மரியாதை இல்லை என்று கூறினார்

நீ பேசவே கூடாது

இதனை பார்த்த காஜல் அந்த புரமோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்த கையோடு வனிதாவையும் வாரியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, மரியாதைய பத்தி யாரும்மா பேசுறது.. அதெல்லாம் நீ பேசக்கூடாது, பேசவே கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

காஜல் வக்காலத்து

காஜல் வக்காலத்து

ஆரம்பத்தில் நியூட்ரலாக இருந்த நடிகை காஜல் தற்போது கவின் சாண்டிக்கு வக்காலத்து வாங்கி டிவிட்டி வருகிறார். அவர்கள் எது செய்தாலும் சரி என்று கூறும் காஜல் மற்றவர்களை உண்டு இல்லை என ஒரு கை பார்த்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X