மரியாதை தானா கிடைக்கனும்.. பிச்சை எடுக்காதீங்க.. முன்னாள் கணவருக்காக மோகன் வைத்யாவை விளாசிய நடிகை!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 75 : Losliya angry over sakshi

சென்னை: மரியாதையை பிச்சை எடுக்காதீர்கள் என சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோரை சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் விளாசியுள்ளார்.

சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆரம்பத்தில் பொதுவாக கருத்து கூறிய அவர், தற்போது சாண்டி மற்றும் கவின் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் நல்லவர்கள் என்பது போல் டிவிட்டி வருகிறார்.

இதற்காக சேரனையும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களையும் கடுமையாக சாடி வருகிறார் காஜல். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு குறித்து டிவிட்டரில் காஜல் கருத்து தெரிவித்துள்ளார்.

ருத்ரதாண்டவம்

ருத்ரதாண்டவம்

நேற்றைய எபிசோடில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத லாஸ்லியா விருதை வாங்கி தூக்கி எறிந்த கையோடு, ருத்ரதாண்டவம் ஆடினார்.

மரியாதையா பேசு

மரியாதையா பேசு

சரி திமிராக பேசியதோடு ஆட்டிட்யூட் காட்டினார். ஒரு கட்டத்தில் மோகன் வைத்யாவின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் ஹலோ.. என்று அழைத்து தரக்குறைவாக நடந்து கொண்டார். இதனால் மரியாதையாக பேசு என மோகன் வைத்யா கூறினார்.

லாஸ்லியா பேசியது சரிதான்

லாஸ்லியா பேசியது சரிதான்

அப்படிதான் பேசுவேன் என்ற லாஸ்லியா உங்களுக்கு நீங்கள் மரியாதையாக பேசிக்கொள்ளுங்கள் என தெனாவட்டாக பதிலளித்தார். இந்நிலையில் லாஸ்லியா பேசியது சரிதான் என டிவிட்டியிருக்கிறார் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல். அதோடு மோகன் வைத்யா மற்றும் சாக்ஷியையும் கடுமையாக விளாசியிருக்கிறார் அவர்.

பிச்சை எடுக்காதீங்க

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, நிச்சயமாக.. நடுவர்களா இருக்க ஒரு தகுதி வேணும், அது இவங்களுக்கு கண்டிப்பா இல்ல. தகுதி இருந்தாதான் மரியாதை பண்ண முடியும். மரியாதை கோரவும் முடியாது, பிச்சை எடுக்கவும் கூடாது. அது தானா கிடைக்னும். இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் நடிகை காஜல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X