என்னது.. இந்த வாரம் சாண்டி எவிக்ட் ஆவாரா? உங்க கனவுலகூட நடக்காது! ரசிகரிடம் பாய்ந்த முன்னாள் மனைவி!
Recommended Video
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியேறிவிடுவார் என்று கூறிய ரசிகருக்கு நக்கலாக பதில் கொடுத்து வெறுப்பேற்றியுள்ளார் அவரது முன்னாள் மனைவியான காஜல்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சாண்டி. இவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான காஜல், அவருக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டு பிரிந்த போதும் கூட சாண்டியை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் உள்ளார் காஜல். இதற்காக ஒருபக்கம் பலர் பாராட்டினாலும், சிலர் திட்டி வருகின்றனர்.

முதல்முறையாக நாமினேஷன்
ஆனால் அவற்றையெல்லாம் காஜல் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாண்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் தர்ஷனும் சாண்டியும் முதல்முறையாக இடம்பெற்றுள்ளனர்.
சாண்டி வீட்டுக்குதான்
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், சாண்டி இந்த வாரம் வீட்டுக்கு போகிறார் ஜி. 5 பேர் கேங்கில் இந்த வாரம் ஒருவர் வீட்டுக்கு போக போகிறார். சேரன் அல்லது கஸ்தூரி குறைந்த வாக்குகள் பெற்று ரகசிய அறைக்கு போவார்கள். சாண்டி கன்டென்ட் கொடுக்க கொஞ்சமும் பயன்படாதவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
கனவிலும் நடக்காது
அதனை பார்த்த காஜல், அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உண்மையாக.. இந்த ஆண்டின் சிறந்த ஜோக் என்று சிரிக்கும் ஈமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும் உங்கள் கனவில் கூட அது நடக்காது என்றும் கூறியுள்ளார் காஜல்.

காஜலின் நம்பிக்கை
காஜல் தொடர்ந்து சாண்டிக்கும் அவரது நண்பரான கவினுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த வாரம் நிச்சயமாக சாண்டி எவிக்ட் ஆக மாட்டார் என்ற நம்பிக்கையில் உள்ளார் காஜல். பார்ப்போம்.. காஜலின் நம்பிக்கை மெய்ப்படுகிறதா என்று..!


Click it and Unblock the Notifications











