கார்னர்.. கார்னர்.. பாரீஸ் கார்னர்.. இப்போ தெரியுதாமா.. வனிதாவை நக்கலடிக்கும் நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸும் வனிதாவுக்கு எதிராக திரும்பியிருப்பதை வைத்து நடிகை காஜல் நக்கலடித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் தான் சொல்வதைதான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை போட்டு அதன்படியே அனைவரும் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் நடிகை வனிதா விஜயகுமார்.
சண்டை மூட்டிவிடுவதிலும், கோள் சொல்வது, போட்டுக்கொடுப்பது, கொளுத்தி போடுவது என வேற லெவலில் இறங்கி வேலை செய்துவருகிறார் வனிதா. அவரை பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலும் அவரை எதிர்க்க முடியாத நிலையில் இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

எதிராக குரல்
ஆனால் தற்போது வனிதா, யாரை இழுத்து தெருவில் விட நினைத்தாலும் அது அவருக்கு எதிராக உள்ளது. அவர் போடும் பால்கள் அவருக்கு எதிராகவே திரும்புகின்றன. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள மொத்த ஹவுஸ்மேட்ஸ்களும் வனிதாவுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து
ஷெரின், தர்ஷன், சாண்டி, சேரன் என அனைவரும் வனிதாவை எதிர்க்க துணிந்துவிட்டனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் மொத்த பிக்பாஸ் வீடும் வனிதாவுக்கு எதிராக திரும்பிவிட்டது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஜாலி
இந்நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல், வனிதா கார்னர் செய்யப்பட்டதை ஜாலியாக கொண்டாடி வருகிறார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இப்போ தெரியுதா வலி
அதில், "கார்னர்.. கார்னர்.. பாரீஸ் கார்னர்.. என்னம்மா வனிதாம்மா இப்ப தெரியுதா உன்ன எல்லாரும் கார்னர் பண்றப்ப அந்த வலி. இப்போ உங்களுக்கு தெரியும் உங்கள் மருந்தின் சுவை. பிக்பாஸ் சீசன் 3 வரலாற்றிலேயே முதல்முறையாக சேரப்பா வனிதாவ எதிர்த்து குரல் கொடுத்திருக்காரு". இவ்வாறு காஜல் வனிதாவை நக்கலடித்தும் வெறுப்பேற்றியும் டிவிட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











