Kanika: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக காரணம் இது தான்.. கனிகா பேட்டி!

சென்னை: தமிழக அரசின் 2022ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளில், எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்த நடிகை கனிகாவிற்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து
Galatta Pink யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை கனிகா, சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதில், நான் சினிமாவில் நடிக்க வருவேன் என்று கனவில் கூட நினைத்ததே இல்லை. நான் நடிகையானது ஒரு விபத்து தான். 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து, கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போதுதான், மிஸ் சென்னை நிகழ்ச்சியில் பாடுவதற்காக ஒரு வாய்ப்பு வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நான் பாடத்தான் சென்றேன். ஆனால், கடைசி நேரத்தில் மிஸ் சென்னை நிகழ்ச்சியில் இருந்து ஒரு பெண் கலந்து கொள்ளாததால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை மிஸ் சென்னை ரன்னரப்பாக வருவேன் என்று. அந்த புகைப்படத்தை பல பத்திரிகைகளில் அட்டை படங்களில் போட்டார்கள். அப்படித்தான் எனக்கு ஷங்கரின் பாயஸ் படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.

Ethirneechal serial kanika
Photo Credit:

நடிகை கனிகா: அதன் பிறகு ஃபைவ் ஸ்டார் திரைப்படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். பல நடிகைகள் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்ட போதும், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். அதன் பிறகு திருமணமாகி லண்டனில் செட்டில் ஆகிவிட்டதால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். தற்போது மீண்டும் நடிக்க வந்து எதிர்சீச்சல் சீரியலில் நடித்தேன்.

விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: நான் லண்டனில் இருக்கும்போதே இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் ஒரு சீரியலில் என்னை நடிக்கும் படி அழைத்தார். அந்த நேரம் என்னால் நடிக்க முடிவில்லை. அதன் பிறகு தான், எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய அளவில் ஒரு பெயரை பெற்றுக் கொடுத்தது. இப்போது சிறந்த நடிகைக்கான அரசு விருதையும் நான் பெற்று இருக்கிறேன். இந்தப் படத்திற்கு விருது கிடைக்கும், அந்தப் படத்திற்கு விருது கிடைக்கும் என நான் நினைத்து ஏங்கிய காலம் உண்டு. ஆனால், லேட்டாக கிடைத்தாலும் இந்த விருது எனக்கு லேட்டஸ்டாக கிடைத்து இருக்கிறது. இதற்காக இயக்குனருக்கும் அந்த சீரியலுடன் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சீரியலில் நான் நடித்தது ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம்.

இதுதான் காரணம்: தற்போது நான், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து விலகி இருக்கிறேன். அதற்கு பலரும் பல காரணங்களை சொல்கிறார்கள். திடீரென நான் அந்த சீரியலை விட்டு விலகவில்லை. என்னுடைய மகன் ரிஷி இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறான். இந்த நேரத்தில் அவனுடன் நான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக தான் நான் சீரியலில் இருந்து விலகினேன். இது குறித்து இயக்குனரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதனால், இது திடீரென எடுத்த முடிவு கிடையாது. நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என சேனலுக்கும் தெரியும், இயக்குனருக்கும் தெரியும், சக நடிகர்களுக்கும் தெரியும் என நடிகை கனிகா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X