பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நடிகை கஸ்தூரி.. வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பாரா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி என்ட்ரியாகியுள்ளதால் அடுத்து என்ன நடக்கப் போகுதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் இல்லாமலேயே சரவணன் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
இதனால் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஸ்ட்ரென்த்து குறைந்து விடும். இதனை சரிக்கட்டும் விதமாக பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை கஸ்தூரியை அனுப்பி வைத்துள்ளார்.

விருந்தாளியா?
அவர் போட்டியாளராக சென்றுள்ளாரா அல்லது விருந்தாளியாக சென்றுள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் கிஃப்ட் பார்சலாக கஸ்தூரியை அனுப்பி வைத்துள்ளார் பிக்பாஸ்.

விமர்சனம்
நடிகை கஸ்தூரி ஸ்ட்ரைட் ஃபார்வடு என்ன தோன்றுகிறதோ அதனை பேசி விடுவார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.

வனிதவிடம் உண்மை
நடிகை வனிதாவை சண்டைக்காரி, சண்டக்கோழி என அனைவரும் விமர்சித்த போதும், அவரிடம் உண்மை இருந்ததாக டிவிட்டியிருந்தார் கஸ்தூரி. தற்போது பிக்பாஸ் வீட்டில் அந்தளவுக்கு பிரச்சனை இல்லை.

வனிதா போல
எல்லாம் சரியாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் சிண்டு முடித்துவிட முடிவு செய்துவிட்டார் பிக்பா. அதனால்தான் வனிதா போல பட்டு பட்டென தெறிக்கவிடும் கஸ்தூரியை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

செம காண்டில்
எப்படியும் டிஆர்பியை குறி வைத்துதான் பிக்பாஸ் கஸ்தூரியை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக நிச்சயம் பிக்பாஸ் குழுவினர் கஸ்தூரியிடம் பேசியிருப்பார்கள். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலர் மீது செம காண்டில் உள்ளார் கஸ்தூரி.

தெறிக்க விடுவார்
இந்நிலையில் இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு, பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை தலை தெறிக்க ஓட விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் ரசிகர்கள் கவலையடைந்திருப்பதையும் கஸ்தூரி நன்கு உணர்ந்திருப்பார். இதனால் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











