ராமேஸ்வரம் போனாலும்.. இந்த பிக்பாஸ் விடாது போலருக்கே! கஸ்தூரி யார மீட் பண்ணியிருக்காங்க பாருங்க!

சென்னை: நடிகை கஸ்தூரி ராமேஸ்வரம் சென்றுள்ள நிலையில் அங்கு ஒரு சர்ச்சைக்குரிய பிக்பாஸ் பிரபலத்தை சந்தித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீரா மிதுன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை தினம் யாருடனாவது பிரச்சனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கடைசியாக சேரன் மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகவே திரும்பியது. இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

போட்டோவுடன் டிவீட்

போட்டோவுடன் டிவீட்

மீரா மிதுனின் நடவடிக்கையால் அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர் ரசிகர்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோவுடன் ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் போனாலும்..

அதில் மீரா மிதுனுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள கஸ்தூரி நான் இன்று யாரை சந்தித்திருக்கிறேன் என பாருங்கள்! ராமேஸ்வரம் போனாலும்.. இந்த பிக்பாஸ் விடாது போலருக்கே! என பதிவிட்டுள்ளார்.

வைல்டு கார்டு என்ட்ரி

வைல்டு கார்டு என்ட்ரி

நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சு அடிபட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைவார் என்று கூறப்பட்டது.

மலேசிய பாடகர்

மலேசிய பாடகர்

இதனை உண்மைதான் என்பதை போல கஸ்தூரியும் டிவிட்டியிருந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவது கஸ்தூரி அல்ல, மலேசிய பாடகர் என்ற தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X