கால் மேல் கால் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது.. ரேஷ்மாவை விளாசிய பிரபல நடிகை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரனை கொஞ்சமும் மதிக்காமல் நடந்து கொண்ட நடிகை ரேஷ்மாவை பிரபல நடிகை ஒருவர் சரமாரியாக விளாசியிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் படி தனது வேலையை செய்து கொண்டிருந்தார் இயக்குநர் சேரன். அப்போது ரேஷ்மா எதையோ கேட்டார். அப்போது தனது கேரக்டரின்படி சத்தமாக பேசினார் சேரன்.

இதனால் கோபமடைந்த ரேஷ்மா ஏன் என்னிடம் இப்படி கத்துறீங்க என்று கேட்டு ஆவேசமானார். வீட்டிற்குள் வந்தும் அதுகுறித்து சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.

நீதான்டா ஃபூலு

நீதான்டா ஃபூலு

அப்போது கேக் சாப்பிட வேண்டும் என்ற அவருக்கு மதுமிதா ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு, இந்த ஏரியாவுலேயே நீ தான்டா ஃபூலு என்று கூறி இதை யாரிடமாவது சொல்லிவிட்டு வா என்றார்.

யார்கிட்டயாவது சொல்

யார்கிட்டயாவது சொல்

உடனே ரேஷ்மா வெளியே ஒன்னு உட்காந்திருக்கே அதுக்கிட்டதான் சொல்ல போறேன் என சேரனை குறிப்பிட்டார் ரேஷ்மா. யார்கிட்டயாவது சொல் என்றார் மதுமிதா.

மரியாதை கொடுக்காமல்

மரியாதை கொடுக்காமல்

இதைத்தொடர்ந்து நேராக சேரனிடம் சென்ற ரேஷ்மா, அதே டயலாக்கை கொஞ்சமும் வாய் கூசாமல் சேரனிடம் கூறினார். அவர் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் நீதான்டா ஃபூலு என்றார்.

பிடித்துக்கொண்ட ரேஷ்மா

பிடித்துக்கொண்ட ரேஷ்மா

இதனால் அதிர்ச்சியடைந்த சேரன், ஏன் அப்படி கூறினாய் என்று கேட்க, எனக்கு கொடுத்த டாஸ்க்கை செய்தேன் என்று திமிராக கூறினார் ரேஷ்மா. என்ன டாஸ்க் கொடுத்தாலும் பேசிவிடுவாயா என்று சேரன் கேட்டதுதான் தாமதம் அப்படியே பிடித்துக்கொண்டார் ரேஷ்மா.

மன்னிச்சுக்கம்மா

மன்னிச்சுக்கம்மா

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சேரனின் திறமைக்கும் அனுபவத்துக்கும் வயதுக்கும் மரியாதை கொடுக்காமல் அப்படி பேசினார். பிறந்தநாளில் கூட என்னை அழவைக்கிறீர்கள் என்றார். இதனால் நொந்து போன சேரன், மன்னிச்சுக்கம்மா உன்ன கயாப்படுத்தனும்ங்கறது என்னுடைய நோக்கம் இல்லை. டாஸ்க் முடிந்ததும் ஏன் அப்படி பேசினேன் என்பதை சொல்கிறேன் என்று கூறினார்.

ஏன் இந்த வேலை?

ஏன் இந்த வேலை?

அப்போது சேரனின் முகத்தை நம்மால் பார்க்கவே முடியவில்லை. இந்த மனிதருக்கு ஏன் இந்த வேலை? இவர் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அவருடைய தரத்தை அறியாதவர்களிடம் அவர் ஏன் இப்படி பேச்சு வாங்க வேண்டும் என்றே தோன்றியது.

சிலுக்காகி விட முடியாது

இந்நிலையில் ரேஷ்மாவின் இந்த பிஹேவியரை விளாசியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்தநாள் அன்று வயது கூடினால் போதுமா? வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியும் பண்பும் கூடவேண்டாமா ? டாஸ்கை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும் தெரியவில்லை, வயதில் மூத்தவரிடம் மரியாதையாக பேசவும் முயலவில்லை... கால் மேல் கால் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது என காட்டமாக கூறியுள்ளார். கையோடு பிறந்த நாள் வாழ்த்தும் கூறியுள்ளார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X