மீராவை வைத்து சேரனை கலாய்ச்சிஃபையிங்.. கடுப்பான நெட்டிசன்ஸ்! வாங்கிக்கட்டும் கஸ்தூரி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக வந்துள்ள கஸ்தூரி வந்த வேகத்தில் சேரனை கலாய்த்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நியூ என்ட்ரியாக நடிகை கஸ்தூரி நுழைந்துள்ளார். கஸ்தூரி எதற்கும் அஞ்சாமல் கருத்து தெரிவிப்பார் என்பதால் பிக்பாஸ் வீட்டில் இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது இதற்கு முன்பு இருந்த வனிதா, மீரா குறித்து கஸ்தூரியிடம் கூறுகிறார் சேரன்.

கையை அங்கேயே வச்சுருக்கீங்களே
அப்போது மீராவா.. என கேட்டு சிரிக்கிறார் கஸ்தூரி. அதனை பார்த்த சேரன் உங்களுக்கு அவரை ஏற்கனவே தெரியுமா என கேட்க, இல்லை கையை நீங்கள் அந்தப்பக்கமே வைத்திருக்கிறீர்களே அதனால் தெரியும் என்று மரண கலாய் கலாய்க்கிறார்.

பாத்தீங்களா..
இதனைக்கேட்ட சேரன், பாத்தீங்களா.. என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காக வந்திருப்பார்கள் அதை ஒவ்வொரிடமும் கேட்கப்போகிறேன் என்கிறார்.

விளாசும் நெட்டிசன்ஸ்
ஆக கஸ்தூரி வந்த வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முதல் ஆளாக இயக்குநர் சேரனிடம் அவரது வேலையை தொடங்கியுள்ளார். ஆனால் இதனை நெட்டிசன்கள் ரசிக்கவில்லை. மாறாக கஸ்தூரியை விளாசியுள்ளனர்.
வந்தவுடனே கேள்வி
பெரிய கமல் சார்ன்னு நினைப்பு, அதான் வந்தவுடனே கேள்வி கேட்குது என்கிறார் இந்த நெட்டிசன்.
இன்டர்வியூ பண்ணவா?
நீங்க எதுக்கு உள்ள வந்தீங்க? எல்லார்கிட்டேயும் இன்டர்வியூ பண்ணவா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
பிக்சை எடுக்கலாம்
கஸ்தூரி அக்கா இந்த பொழப்புக்கு பதிலா பிச்சை எடுக்கலாம்.. என்கிறார் இந்த ரசிகர்.
சாண்டி கேள்வி
நீ எதுக்கு வந்தன்னு சாண்டி கேட்க போறான் கஸ்தூரியை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











