இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம்.. கவினை விளாசிய கஸ்தூரி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை நடிகை கஸ்தூரி விளாசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், அங்குள்ள இளம் பெண்களிடம் நெருக்கமாக பழகி வந்தது ஊரறிந்த விஷயம். சாக்ஷியையும் லாஸ்லியாவையும் ஒரே நேரத்தில் ஓட்டி வந்தார்.
இந்த விஷயம் லாஸ்லியாவுக்கு தெரியவர கவினை எங்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறாய், நீ செய்தது பெரிய தப்பு என்று கவினிடம் சண்டை போட்டார்.

கிழித்த கமல்
இந்நிலையில் கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமை குறும்படம் போட்டு பிக்பாஸ் வீட்டில் மீராவின் பிரச்சனைக்கு காரணமான சாக்ஷியின் முகத்திரையை கிழித்தார். ஆனாலும் சேரன், சரவணன் உள்ளிட்டோர் சாக்ஷிக்கு சப்போர்ட் செய்தனர்.

சாக்ஷியின் பெயர்
மொழி பிரச்சனை காரணமாக இந்த தவறு நடந்திருக்கலாம் என சப்பைக்கட்டு கட்டினர். ஆனாலும் இந்த வாரம் நாமினேஷனில் சாக்ஷியின் பெயரை பலரும் நாமினேட் செய்துள்ளனர்.

கவின் நாமினேஷன்
மற்றவர்கள் குறும்படத்தை பார்த்து சாக்ஷிதான் பொய் சொல்லியுள்ளார் என்ற ரீதியில் அவரது பெயரை நாமினேட் செய்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கவினும் சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்துள்ளார்.
இல்லைனா போடி
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி டிவிட்டியுள்ளார். அதாவது,
இருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம். ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டுள்ளார்.

காதல் முறிவு
கவினும் சாக்ஷியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். திருமணம் செய்து கொள்வது வரை இருவரும் டிஸ்கஸ் செய்தனர். ஆனால் கவின், லாஸ்லியாவுடன் நெருங்கி பழகியதால் சாக்ஷி கவினுடனான காதலை முறித்துக்கொண்டார்.

ஆனால் கவின்
தன்னை கவின் ஏமாற்றிய பின்னரும் சாக்ஷி கவினின் பெயரை நாமினேட் செய்யவில்லை. ஆனால் கவின் குறும்படத்தை காரணமாக காட்டி அவரை ஈஸியாக நாமினேட் செய்துவிட்டார். இதனை வைத்தே கஸ்தூரி டிவிட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











