நடிகை காவேரி ரகசிய திருமணம்… காதலரை கைபிடித்தார்
ரிஷிவந்தியம்: நடிகை காவேரி தனது காதலரை திடீர் என்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"வைகாசி பொறந்தாச்சி' தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர், நடிகை காவேரி. இவர், தன் பெற்றோருடன், சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். தற்போது, "டிவி' சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் தங்கம் சீரியலில் இளவஞ்சியாக நடித்தது அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இப்போது வம்சம் தொடரில் நடித்து வருகிறார்.

சென்னை, வேளச்சேரியில் பார்மாசூட்டிகல் ஏஜன்சி நடத்திவரும் ரகேஷ் என்பவரை கடந்த 6 மாதகாலமாக காதலித்து வந்தார். ராகேஷ் கர்நாடகா மாநிலம் உடுப்பியை பூர்வீகமாக கொண்டவர்.
இவர்களின் காதல் வீட்டிற்கு தெரியவே எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோரின் சம்மதம் கிடைக்காமல் போகவே நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு, நடிகை காவேரியும் ரகேஷ்சும் வந்தனர். அவர்களுடன் நண்பர்கள் சிலரும் வந்தனர்.மூலவர் சன்னிதி எதிரில் காலை, 10:30 மணிக்கு, ரகேஷ், நடிகை காவேரி கழுத்தில் தாலி கட்டினார்.
இந்த திருமணம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக காவேரி கூறியுள்ளார். என் அண்ணன் மார்க் மூலம் ரகேஷ் அறிமுகமானார். இருவரும் கடந்த, ஆறு மாதங்களாக காதலித்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நண்பர்கள் உதவியுடன் ரிஷிவந்தியம் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம் என்று காவேரி தெரிவித்தார். சீரியல்களில் நடித்து பிரபலமாகி வரும் காவேரியின் ரகசிய திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications