மகளுக்கு போட்டியாக இறங்கி குத்திய கவிதா.. வாயடைத்து போன ரசிகர்கள்!

சென்னை: போட்டினா போட்டி இதுதான் போட்டின்னு சொல்ற மாதிரி அம்மாவும் பொண்ணும் இறங்கிப் போட்டுள்ள குத்தாட்டம் வைரலாகியுள்ளது.

நடிகை கவிதாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதானு இவ்வளவு நாளா தெரியாதேனு ரசிகர்களும் ஆச்சரியப்படுறாங்க.

சீரியலில் மட்டும் தான் நான் அப்படி வீட்டுக்கு வந்துட்டா இப்படித்தானு மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்டு குதூகலித்துள்ளார் கவிதா.

வயசு இன்னும் ஆகலயா

வயசு இன்னும் ஆகலயா

இன்றும் கூட, பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்கும் கவிதாவை இந்த சின்ன வயசிலேயே மாமியாராக மாத்திட்டிங்களேனு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதுவும் தற்போது இவருடைய ஆட்டத்தைப் பார்த்து அசந்துபோய் நடிப்புனாலும் ஒரு நியாயம் வேணாமா இப்படியா கேரக்டரை கொடுப்பாங்கன்னு வக்காலத்து வாங்கும் ரசிகர்கள்.

மனசுல பதிஞ்ச கேரக்டர்

மனசுல பதிஞ்ச கேரக்டர்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் ராசாத்தியின் மாமியாராக நடித்துவரும் கவிதா தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர் .என்னது இவர்தான் இந்த சீரியலில் மாமியாராக நடித்து கொண்டிருக்கிறார் என்பதையே பலரால் நம்ப முடியலையாம். அந்த அளவிற்கு ஹீரோயின் மாதிரி இளமையோடு துள்ளிக்குதித்து வருகிறார் .எப்படி நீங்க இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க சம்மதித்திங்னு ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அம்சமான ஆனந்தி

அம்சமான ஆனந்தி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்தம் சீரியலில் மூலமாகத்தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .முதலிலே தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அசந்து போய்விட்டார் .முதல் சீரியலில் இவருடைய ஹோம்லியான முக அழகை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர் .இதனை தொடர்ந்து தான் இவருக்கு பல சினிமா சீரியல் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. சின்னத்திரை நடிகைகளில் அதிகமான முடி இவருக்குத்தான் இருந்து வந்திருக்கிறது .அதுவும் இவருடைய பிளஸ் பாயிண்ட் தான்.

சாந்தமான கேரக்டர்தானாம்

சாந்தமான கேரக்டர்தானாம்

இவர் தொடர்ந்து இப்ப வரைக்கும் பல சீரியல்களில் அக்காவாகவும் ,அம்மாவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர் எந்த கேரக்டரில் நடித்தாலும் இவருடைய நடிப்பை இவருடைய கேரக்டரையும் ரசிகர்களுக்கு நன்றாகவே பிடித்திருக்கிறது .இவர் ஆரம்பத்தில் சீரியல்களில் கதாநாயகியாக நடித்த வந்து கொண்டிருக்கும் போதும் சரி இப்பவும் சரி அதே எளிமையாகத்தான் இருந்து வருகிறாராம்.

பட்டைய கிளப்பும் ஆட்டம்

பட்டைய கிளப்பும் ஆட்டம்

இவருக்கு நடிப்பு மட்டுமல்ல டான்ஸும் ரொம்பவே பிடிக்கும் என்பதால் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் ரீல்ஸ்ஸ் வீடியோக்களில் ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகளுடனும் நான் சளைத்தவரல்ல என்று போட்டி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

மகளுடன் குத்தாட்டம்

மகளுடன் குத்தாட்டம்

இதுவரைக்கும் இவரை மாமியாராக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது மாடர்ன் உடையில் மகளுடன் மல்லு கண்டிக்கொண்டு போட்ட ஆட்டத்தை பார்த்து வாயடைத்துப் போய் இருக்கின்றனர் .இதுல யாரு அம்மா பொண்ணுன்னே தெரியலையே அந்த அளவிற்கு இளமையா இப்பவும் துள்ளுறாரேனு பொறாமைப்படும் ரசிகர்கள் ,இவருக்கு மட்டும் வயது ஆக ஆக இளமை கூடிக்கொண்டே போகுது காரணம் என்னன்னு தெரியாமல் தவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X