ஓராண்டில் கசந்த வாழ்க்கை.. தற்கொலைக்கு முயன்றேன்.. வாழ்க்கையே போச்சு.. சீரியல் நடிகை வேதனை!

சென்னை: சீரியல் நடிகை கிருத்திகா தனது திருமண வாழ்க்கையில் நடந்த கசமான அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான மெட்டி ஒலி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இந்த சீரியலில் இவரின் கேரக்டர் பிடித்துப்போக இவர் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார். இவருக்கு அழகு ஒரு புறம் இருந்தாலும், நடிப்பில் வெளிப்படும் வில்லத்தனம் இவருக்கு பக்காவாக பொருந்தி போனதால் பல சீரியல்களில் இவர் வில்லியாகவே வந்தார்.

Actress Krithika Annamalai Emotional interview about her marriage life

அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மருமகளாக கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த சீரியல் அண்மையில் முடிவடைந்தது. டான்ஸ் மீது ஈடுபாடு கொண்ட இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தினார்.

நடிகை கிருத்திகா அண்ணாமலை: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில்,என் திருமண வாழ்க்கையில் ஒரு பிரச்சனை இருந்தால் பரவால, எல்லாமே பிரச்சனை தான். திருமணமான பத்து மாதத்திலேயே என் மகன் பிறந்துவிட்டான். அப்போது நான் 3 சீரியல்களில் நடித்துக்கொண்டு இருந்தேன். குழந்தை பிறந்ததும் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போதே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.

தற்கொலைக்கு முயன்றேன்: அப்போது என் கணவருக்கு பிஸ்னஸ் லாஸ் ஆகிவிட்டதால், மீண்டும் சீரியலில் நடிக்க வந்தேன்.அப்போது அவர் வீட்டில் இருந்தார். இதனால், எனக்கும் அவருக்கும் சண்டை நடப்பது நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பிரச்சனையை சமாளிக்க முடியாமல், குழந்தை பிறந்த இரண்டு மாதத்திலேயே தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்தவமனையில் இருந்தேன். அதன் பிறகும் கணவர் தான் வேண்டும் என் முடிவு செய்து, அவருடன் நான்கு ஆண்டுகள் அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்தேன். ஆனால், அதன்பிறகு என்னால் முடியாததால் அவரை விவாகரத்து செய்துவிட்டேன்.

இரண்டாம் திருமணம் வேண்டாம்: பலருக்கு எனக்கு விவாகரத்து ஆன விஷயமே தெரியாது, இதை வெளியில் சொல்ல நான் விரும்பவில்லை. அண்மையில் தான் ஒரு பேட்டியில் எனக்கு விவாகரத்து ஆனதை சொன்னேன். அதைப்பார்த்த பலர் நடிகைகளுக்கு எப்போதும் விவாகரத்து செய்வது தான் வேலை, அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை செட் ஆகாது என்று கமெண்ட் செய்கிறார்கள். உண்மையில் நடிகைகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு என்பதை யாரும் நினைப்பது இல்லை. நான் என் கணவரோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் போராடினேன். ஆனால் அது முடிவில்லை என்றார். தொடர்ந்து இரண்டாம் திருமணம் குறித்து பேசிய அவர், எனக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் ஈடுபாடு இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X