»   »  'பாசமலர்' ரசிகர்களை பரவசப்படுத்திய குஷ்பு.. 'சன்'னுக்கு திடீர் விசிட்!

'பாசமலர்' ரசிகர்களை பரவசப்படுத்திய குஷ்பு.. 'சன்'னுக்கு திடீர் விசிட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலையில் ஒளிபரப்பாகி வரும் கண்களையும், நெஞ்சையும் உருக்கி, முறுக்கி பிழிந்தெடுக்கும் நெகிழ்ச்சித் தொடரான பாசமலர் மெகா சீரியலில், திடீரென நடிகை குஷ்பு தலைகாட்டி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சாப்பிடும் இட்லி முதல் கோவில் கட்டுவது வரை என குஷ்புவை கொண்டாடி வருபவர்கள் தான் தமிழ் ரசிகர்கள். ‘வயசானாலும், உன் ஸ்டைலும் அழகும் மாறலை' என்ற ரஜினி பட வசனம் நிச்சயமாக குஷ்புவுக்கும் (கொஞ்சம் குண்டா இருந்தாலும்) பொருந்தும்.

வெள்ளித்திரையில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தலைவி ஆனார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் முகம் காட்ட ஆரம்பித்தார்.

ஜாக்பாட்...

ஜாக்பாட்...

ஜெயா டிவியில் குஷ்பு தொகுத்து வழங்கிய ஜாக்பாட் தொடர் அவருக்கு மேலும் பாராட்டுக்களை வாங்கித் தந்தது. அந்நிகழ்ச்சியைப் பார்த்த பெரும்பாலான பெண்கள், குஷ்புவின் விதவிதமான ஜாக்கெட் மாடல்களுக்கு ரசிகைகள் என்றால் மிகையில்லை.

சீரியல் நாயகி...

சீரியல் நாயகி...

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த குஷ்பு, மருமகள், ஜனனி, கல்கி உள்ளிட்ட சீரியல் நாயகி ஆனார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடுவரான குஷ்பு, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ' தொடரிலும் நடித்தார்.

புதிய சீரியல் பணி...

புதிய சீரியல் பணி...

திமுகவில் இருந்து வெளியேறியதும், வேகவேகமாக தனது பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலை முடித்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு, தீவிர அரசியல் பணிகளுக்கு இடையிலும், விஜய் டிவிக்காக சீரியல் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக பேச்சு அடிபட்டது.

பாசமலர் தரிசனம்...

பாசமலர் தரிசனம்...

இந்நிலையில் தான் நேற்று பாசமலர் சீரியலில் திடீர் தரிசனம் தந்துள்ளார் குஷ்பு. கடந்த சில நாட்களாகவே அச்சீரியலில், ‘குஷ்புவைப் பார்க்கப் போகிறோம்' என கதாபாத்திரங்கள் களேபரம் செய்து கொண்டிருந்தன. மாமியார் கதாபாத்திரம் இதற்கென பியூட்டி பார்லர் எல்லாம் சென்று வந்தது.

சாக்குபோக்கு ?

சாக்குபோக்கு ?

ஏதாவது சாக்குபோக்கு சொல்லி, குஷ்புவைக் காட்டாமல் சமாளித்து விடுவார்கள் என்றே நினைத்து வந்தோம். நேற்றைய எபிசோடில் குஷ்புவை சந்திக்க பாசமலர் டீம் அவரது வீட்டிற்கு செல்கிறது.

நிஜமாவே குஷ்பு சார்...

நிஜமாவே குஷ்பு சார்...

அங்கே நிஜமாகவே மாடியில் இருந்து குஷ்பு இறங்கி வருகிறார். பாசமலர் டீம் நடிப்புக்காக காட்டிய ரியாக்‌ஷனை, நிச்சயமாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் நிஜமாக காட்டியிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மசாலா ஆர்டர் செய்ய...

மசாலா ஆர்டர் செய்ய...

பாசமலர் கதைப்படி, அண்ணன் மற்றும் அவரது இரண்டு தங்கைகள் இணைந்து மசாலா பவுடர் வியாபாரம் நடத்தி வருகின்றனர். அதன் சுவையை ருசித்த குஷ்பு, தான் ஏற்பாடு செய்திருக்கும் அன்னதான விருந்திற்கு மசாலா ஆர்டர் செய்வதற்காக அவர்களை அழைத்துப் பேசுகிறார்.

டிப்ஸ்...

டிப்ஸ்...

குஷ்புவைப் பார்த்த ஆச்சர்யத்தில் மாமியார் கதாபாத்திரம், அவரைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறார். பின்னர், நீங்க என்ன சாப்பிடுறீங்க இவ்ளோ அழகா இருக்கீங்களே' என பியூட்டி டிப்ஸ் கேட்கிறார்.

பழைய சோறா...?

பழைய சோறா...?

அதற்கு குஷ்பு, ‘உங்களை மாதிரி தான் நானும் சாப்பிடுறேன்' என பதிலளிக்கிறார். உடனே அந்த மாமியார் கதாபாத்திரம் ‘பழைய சோறா' என கேட்கிறார்.

புகைப்படம்...

புகைப்படம்...

இப்படியாக இந்தக் காட்சிகள் செல்ல, இறுதியில் அனைவரும் சேர்ந்து குஷ்புவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக திரும்புவதாக அக்காட்சி முடிகிறது.

சன் டிவியில் சீரியல்..?

சன் டிவியில் சீரியல்..?

குஷ்புவின் இந்த திடீர் தரிசனம் மூலம், அவர் விரைவில் சன் டிவியில் தொடர் தயாரிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு ஒரு முன்னோட்டமாகக் கூட இந்த பாசமலர் சீரியலைப் பயன்படுத்தி இருக்கலாம்.

எது எப்படியோ, குஷ்பு என பேப்பரில் எழுதிக் காட்டினால் கூட ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை அவருக்கு கவலையில்லை. நிச்சயமாக புதுமையான புரட்சிகரமான கதையோடு அவர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கலாம் !

அப்ப ராதிகா?

அப்ப ராதிகா?

ஒருவேளை குஷ்பு சன்னுக்கு வந்தால் கண்டிப்பாக போட்டி கடுமையாகும். காரணம் ஏற்கனவே அங்கு ராதிகாவின் ஆட்சி அமோகமாக இருக்கிறது. கூடவே ரம்யா கிருஷ்ணனும் இருக்கிறார். இதில் குஷ்புவும் கோதாவில் குதித்தால் போட்டி சூப்பர்தான் !

English summary
The actress and congress leader Kushboo was appeared in the serial 'Pasamalar' which is telecasted in Sun TV.
Please Wait while comments are loading...