ஒரு சேனலே புறக்கணிப்பு.. அவங்க சுட்ட அப்பளம்.. தமிழக அரசு சின்னத்திரை விருது.. கொந்தளித்த நடிகை!

சென்னை: தமிழக அரசு சார்பில் 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான சின்னத்திரை மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சின்னத்திரையில் தரமான கதைகள், சிறந்த நடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த எட்டு ஆண்டுகளில் ஒளிபரப்பான மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியலுக்கும், நடிகர், நடிகை விருதுகள் அறிவிக்கப்பட்டது.

பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை லட்சுமி, விருது வழங்கப்பட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு 2016 முதல் 2022 வரை சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகளை அறிவித்து இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி, விருது பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், எனக்கு விருது கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. 2016 முதல் 2022 வரை விருது வழங்கப்பட்டது என்றால், 2018ல் இருந்து 2020 வரை செம்பருத்தி சீரியல் பீக்கில் இருந்தது. நான் அந்த சீரியலில் வில்லியாக நடித்து இருந்தேன். சீரியலை பார்க்கும் அனைவரும் நல்லா நடித்து இருக்கிறீர்கள் என என்னை பாராட்டினார்கள்.

Lakshmi Serial award
Photo Credit:

சேனல் புறக்கணிப்பு: இந்த சீரியலுக்கு ஏன் விருது கிடைக்கல, தமிழக அரசு விருது என்பது குடும்ப விருது இல்லையே, குடும்பத்தினர், நெருங்கியவர்கள், சொந்தக்காரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் விருதா? இந்த விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை. விருதுகளை வழங்குவதற்கு என்று ஒரு செலக்டிங் கமிட்டி இருக்கும், அந்த செலக்டிப் கமிட்டியை தேர்வு செய்பவர் யார். அவர்கள் அறிவோடு தேர்வு செய்து இருந்தால் என்னை போன்றவர்களுக்கு நிச்சயம் விருது கிடைத்து இருக்கும். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை ஒரு சேனலையே புறக்கணித்து இருக்கிறார்கள். அதில் நடித்த எத்தனைப்பேருக்கு என்னை போல மனசு வலித்து இருக்கும்.

குடும்ப விருதா: முதலில் இதுபோன்ற தலைமை இடத்திற்கு வருபவர்களுக்கு முழு தகுதி இருக்கிறதா என்று பார்த்து அவர்களை அந்த இடத்தில் உக்கார வையுங்கள். அவர்கள் சுடும் அப்பளைத்தை மட்டும் சுட்டு சாப்பிட்டுக்கொண்டு, அதை அடுத்தவர்களுக்கும் படைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். விருதுகளை தேர்வு செய்பவர்கள் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் விருது வழங்குகிறார்கள் என்றால், அதை தமிழ்நாடு அரசு விருது என்று சொல்ல வேண்டாம். அது உங்கள் குடும்ப விருது என்று சொல்லிக்கொள்ளுங்கள் என்று நடிகை லட்சுமி அந்த வீடியோவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Read more about: lakshmi serial award
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X