எலும்பும் தோலும் மட்டும் தான் இருந்துச்சு… மெட்டி ஒலி உமா மறைவு குறித்து கண்கலங்கிய நடிகை லதா !

சென்னை: மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Recommended Video

Mettioli Viji என்னோட மகள் தான் Delhi Kumar Emotional | Latha Rao

அவருடைய மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவு குறித்து சீரியல் நடிகை லதா கண்கலங்கி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மெட்லி ஒலியில்

மெட்லி ஒலியில்

சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றத் தொடர மெட்டி ஒலி. இந்த தொடரை திருமுருகன் இயக்கி இருந்தார். இந்த தொடரில், திருமுருகனின் மனைவி கதாபாத்திரத்தில் உமா மகேஸ்வரி நடித்திருந்தார்.

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி

கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிக்கவில்லை. சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

மஞ்சள் காமாலையால்

மஞ்சள் காமாலையால்

அவர் பல நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அண்மையில் அதிலிருந்து மீண்டு வந்த சில நாள்களில் மறுபடியும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

எலும்பும் தோலுமா

எலும்பும் தோலுமா

இவருடைய இறப்பு பலரை கண்கலங்க வைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகை லதா, உமா மகேஷ்வரி உடனான தன்னுடைய நட்பு பற்றி உருக்கமாக பேசினார். மெட்டி ஒலி நாடகத்திலும் சரி, ஒரு சில படங்களிலும் சரி உமா நல்ல பப்ளியா இருந்தாங்க, ஆனால் இப்போ அவங்க உடலை பார்க்கும் போது ஒன்னுமே இல்லை...அது உமாவே இல்லை... உமா மாதிரியே இல்லை... எலும்பும் தோலு மட்டும் தான் இருந்துச்சு... எனக்கு அவங்க மேல கோவம்தான் வருது... உடம்பை இப்படி கவனிக்காம விட்டுட்டாங்களே என்று கண்கலங்கி பேசினார்.

கடைசி வாழ்த்து

கடைசி வாழ்த்து

அதே மாதிரி பிறந்த நாள், திருமண நாள் என எதுவா இருந்தாலும் மறக்காம விஷ் பண்ணிடுவாங்க. கடைசியா என் பிறந்த நாளுக்கு ஹேப்பி பர்த்டே என்று கூறியிருந்தார். அதுதான் அவர் கடைசியாக எனக்கு அனுப்பிய வாய்ஸ் நோட். கடைசி வாழ்த்தும் அதுதான் என்று அழுதபடி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X