Madhumitha: புதிய தொடரில் கமிட்டான ஜாங்கிரி மதுமிதா.. எந்த சீரியல் தெரியுமா?

சென்னை: சினிமாவில் சந்தானம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் மிதுமிதா.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்தப் படம் இவருக்கு ஜாங்கிரி என்ற பட்டப்பெயரை பெற்றுத் தந்தது.

பல படங்களில் பிசியாக நடித்துவந்த நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார்.

Actress Madhumitha going to join Sun TVs Iniya serial

இனியா தொடரில் இணைந்த ஜாங்கிரி நடிகை: நடிகை மதுமிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருபவர். சந்தானம் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். அருள் நிதியுடன் டிமாண்டி காலனி படத்தில் இணைந்து நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றுள்ளார். அதில் ஜில்லு என்று கூப்பிடச்சொல்லி காமெடி கலாட்டா செய்திருப்பார். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் இவர் நடித்த கேரக்டர் இவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரை பெற்றுத்தந்தது. இத்ப் படம் இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பங்கேற்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் மதுமிதா. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கையை அறுத்துக் கொண்டது பரபரப்பானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மதுமிதாவிற்கு குழந்தை பிறந்த நிலையில், சிறிது காலம் ஓய்வில் இருந்த அவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். தற்போது முதலில் அவர் களமிறங்கியுள்ளது சின்னத்திரை சீரியலில்தான். சன் டிவியின் முன்னணி சீரியலான இனியா தொடரில் தற்போது மதுமிதா நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இனியா தொடர். விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் பிசியாக நடித்துவந்த ஆல்யா மானசா, குழந்தை பிறப்பையொட்டி அதிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து தற்போது இனியா தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் தற்போது சன் டிவியின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் தற்போது ஜாங்கிரி மதுமிதா இணைந்துள்ளது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அவரது கேரக்டர், தொடரில் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இந்த சீரியலில் இனியாவின் கணவர் விக்ரமும் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X