'ஜாங்கிரி' மதுமிதாவுக்கு இப்படி ஒரு ஆசையா... கமல்கிட்ட பளிச்சின்னு சொல்லிட்டாப்ல!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நகைச்சுவை நடிகை மதுமிதா கமலிடம் பளிச்சென ஒரு விஷயத்தை கூறிவிட்டார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று தொடங்கியது. இதில் தமிழ் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்றுள்ளன.

மொத்தம் 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள். இதில் நகைச்சுவை நடிகை மதுமிதாவும் ஒருவர். இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஒரு கல் ஒரு கண்ணாடி, டிமாண்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில்

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில்

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மதுமிதா சின்னப்பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை சீரியலிலும் நடித்துள்ளார். அண்மையில் தனது தாய் மாமா மகனை திருமணம் செய்து கொண்ட மதுமிதா 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கப்போகிறார்.

பளிச்சென கூறிய மதுமிதா

பளிச்சென கூறிய மதுமிதா

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பாக கமலின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, கமலிடம் சதிலீலாவாதி பார்ட் 2 எடுத்தால் அதில் உங்களுக்கு நான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இதுதான் என் ஆசை என்றும் கமலிடம் பளிச்சென கூறினார்.

இவர்களுக்கு பலப்படம்

இவர்களுக்கு பலப்படம்

அதைக்கேட்ட கமல், சிரித்த படியே உங்களுக்கு ஒரு படம்.. இவர்களுக்கு பலப்படம் என பார்வையாளர்களை சுட்டிக்காட்டினார். சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நகைச்சுவை நடிகை கோவை சரளா நடித்திருப்பார்.

கோவை சரளா ரோலில்

கோவை சரளா ரோலில்

கொஞ்சும் கொங்கு தமிழில் நடிகை கோவை சரளாவும் நடிகர் கமல்ஹாசனும் அட்டகாசம் செய்திருப்பார்கள். இந்நிலையில் தான் அந்தக் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மதுமிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X