மன்னன் மகளாக டிவியில் நுழைந்திருக்கும் நடிகை மதுமிதா

By Mayura Akilan

டிவி சீரியலுக்கு வந்துள்ள புதுவரவு நடிகை மதுமிதா. சினிமா நடிகைகள் திரைப்பட வாய்ப்பு குறைந்து போனால் சீரியலுக்கு வருவது புதிதில்லை.

சினிமாவிற்கு வந்த உடனேயே திருமணம், குழந்தை என்று செட்டிலானவர் நடிகை மதுமிதா. மகன் வளர்ந்து பள்ளிக்கு போன உடனேயே சீரியலில் நடிக்க வந்துவிட்டார்.

ஜெயா டிவியில் மன்னன் மகள் என்ற சீரியலில் லீட் ரோல் கிடைக்கவே ஓகே சொல்லிவிட்டார். 25 எபிசோடுகளை எட்டப்போகும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் இனிய சீரியலாகிவிட்டது. புதிய பயணம் பற்றி அவர் கூறுவதைக் கேளுங்களேன்.

குடைக்குள் மழை நாயகி

குடைக்குள் மழை நாயகி

பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது காதல் மெய்ப்பட என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

மன்னன் மகள் நாயகி

மன்னன் மகள் நாயகி

இந்த நிலையில் மன்னன் மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். சினிமா பிடிச்ச விசயம். அதற்காக குத்தாட்டம் போடமுடியாது எனவேதான் டிவியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன் என்கிறார் மதுமிதா.

விடாமல் துரத்திய வாய்ப்பு

விடாமல் துரத்திய வாய்ப்பு

சின்னத்திரை வாய்ப்புகள் என்னை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. திருமணமான புதிதில் ராதிகா மேடம்கூட கூப்பிட்டாங்க. எனக்குதான் சின்ன தயக்கம் இருந்தது. அதற்குள் பையன் பிறந்திட்டான் அவனை கவனிக்க வேண்டியது இருந்தது.

தெலுங்கு டிவியில் தொகுப்பாளர்

தெலுங்கு டிவியில் தொகுப்பாளர்

இப்போ அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். தெலுங்குல சில டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போதான் டி.வியோட ரீச் தெரிஞ்சுது. இப்போது துணிச்சலா சீரியல்ல நடிக்க வந்துட்டேன்.

சினிமாவில் வாய்ப்பு

சினிமாவில் வாய்ப்பு

சமீபத்தில் பிரியாணி படத்தில் நடித்திருக்கிறேன். தமிழ் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்

லீவ் நாளில் ஹைதராபாத்

லீவ் நாளில் ஹைதராபாத்

என் கணவர் சிவ பாலாஜி தெலுங்கு சினிமால பிசியா நடிக்கிறார். வார நாட்களில் சென்னையில் நடித்து விட்டு சனி, ஞாயிறு கிழமைகளில் ஹைதராபாத்துக்கு பறந்திடுவேன் என்கிறார் மதுமிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X