»   »  பூங்கொடியால் புயல் உருவாகுமா?வாணி ராணியில் அதிரடி திருப்பம்

பூங்கொடியால் புயல் உருவாகுமா?வாணி ராணியில் அதிரடி திருப்பம்

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் வாணி ராணி அதிரடி திருப்பங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. அண்ணன் தம்பிக்குள் பிரிவு தனிக்குடிதனம் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில் வாணி ராணியின் அண்ணன் மகள் பூங்கொடியின் மூலம் புதிய புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணியின் மகள் செல்வியின் காதல் திருமணத்தை நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வரும் வாணி அதை எப்படி குடும்பத்திற்கு தெரியாமல் மறைக்கிறாள்? இளைஞர்களின் சண்டை தொடருமா? என்ற கேள்விகளுடன் இனிவரும் எபிசோடுகளை பார்க்கலாம்.

பூமி நாதன் – சாமிநாதன்

பூமி நாதன் – சாமிநாதன்

சகோதரிகளான வாணி - ராணியை திருமணம் செய்த பூமி நாதன் - சாமிநாதன் இருவரும் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் இல்லை என்ற உண்மையை குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லிவிடுவானா பூமிநாதன்? இதன் மூலம் குடும்பம் உடையுமா?

காத்திருக்கும் காதலர்கள்

காத்திருக்கும் காதலர்கள்

ராஜேஸ் - செல்வியின் காதல் திருமணத்தை நிறுத்திய வாணி அவர்கள் இருவரையும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கச் சொல்லிகிறாள். இந்த விவகாரம் வீட்டுக்கு தெரியக்கூடாது என்றும் செல்வியிடம் கூறுகிறாள் வாணி. இது தெரியவந்தால் என்னவாகும்?

பூங்கொடியின் வரவு

பூங்கொடியின் வரவு

மனோ -ஜோதி தம்பதியின் மகள் பூங்கொடியாக புதிய பாத்திரத்தில் மகாலட்சுமி அறிமுகமாகிறார். இவர் எதற்கெடுத்தாலும் பந்தையம் கட்டி அதில் ஜெயிக்கத் துடிக்கும் பைங்கிளி. எல்லோரிடமும் சட்டென ஒட்டிக்கொள்ளும் குணம் படைத்தவள்.

புயல் உருவாகுமா?

புயல் உருவாகுமா?

வாணி - ராணி வீட்டிற்குள் பூங்கொடி அடி எடுத்து வைக்கும் நேரம் புயலே உருவாகிறது. சூர்யா - பூங்கொடி திருமணத்தை நடத்த வேண்டும் என்ற பாட்டி சாந்தி வில்லியம்ஸ் கனவு நனவாகுமா? போன்ற பல கேள்விகளுக்கு எதிர்வரும் எபிசோடுகளில் விடை கிடைக்க உள்ளது.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் ராதிகா சரத்குமார், வேணுஅரவிந்த், பப்லு, ரவிக்குமார், ஜோக்கர்துள்சி, ஜோதிரெட்டி, சாந்திவில்லியம்ஸ், வீணா வெங்கடேஷ், அருண், விக்கிசுதீப், நிகிலா ராவ், ராஜ்குமார், பேபி நேஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஓ.என். ரத்னம் இயக்கியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Twin sister's Vani and Rani get married to an elder and younger brother of the same family respectively. Vani is a roaring lion at the court room who is looked up as a role model to so many upcoming lawyers for her advocating abilities, whereas Rani is a well versed home maker.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more