Meena: மீனாவுக்குள்ள இப்படியொரு பாடகரா.. சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியில் அசத்தல்!

சென்னை: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானவர். தொடர்ந்து 40 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக, நாயகியாக நடித்து மாஸ் காட்டிய மீனா, தொடர்ந்து தற்போதும் நாயகியாகவே நடித்து வருகிறார். கேரக்டர் ரோல்களிலும் இவரை பார்க்க முடிகிறது.

Actress Meena joined Vijay TVs Super singer junior 9 show as a special guest and sung a song

சமீபத்தில் இவரது 40 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் மீனா 40 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஷோவில் பங்கேற்று பாட்டு பாடிய மீனா: நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கிய மீனா, தொடர்ந்து நாயகியாக என் ராசாவின் மனதிலே படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார். படத்தில் ரஜினியிடம் மாமா, மாமா என்று இவர் உருகும் காட்சிகளில் ரசிகர்களும் உருகினார்கள்.

தொடர்ந்து கமல், ரஜினி, சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா, தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தென்னிந்திய அளவில் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கினார். சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக இவர் நடித்த த்ரிஷ்யம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி சூப்பர்ஹிட்டானது.

தமிழிலும் மீனா நடிப்பில் அண்ணாத்த படம் வெளியானது. ரஜினியுடன் இணைந்து மீனாவும் குஷ்பூவும் செய்த கலாட்டாக்கள் இந்தப் படத்தில் அதிகமான ரசிகர்களை ஈர்த்தது. தொடர்ந்து மீனா சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த நிலையில், அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சோகமாக அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். பேரிடியை தாங்கிய மீனா, தன்னுடைய மகள் நைனிகாவிற்காக அதிலிருந்து மீண்டுள்ளார்.

அவருக்கு சக நடிகர்களும் முன்னாள் நாயகிகளும் சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றனர். அவர்களின் ஆதரவோடு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மீனா. அவரை சில ரியாலிட்டி ஷோக்களிலும் பார்க்க முடிகிறது. தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார் மீனா. இறுக்கி அணைத்து உம்ம தருமோ என்று கேட்ட சிறுமிக்கு அதை அப்படியே செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் சிறப்பாக நடிகை மீனா மேடையேறி பாடல் பாடினார். எஜமான் படத்தில் ரஜினியுடன் அவர் பாடிய டூயட் பாடலான ஆலப்போல் வேலப்போல் என்ற பாடலை அவர் க்யூட்டாக பாடினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணைங்க, பாடகர்கள் மனோ, சித்ராவும் மீனாவுடன் இணைந்து பாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடலை சிறப்பாக பாடி முடித்த மீனாவிற்கு சித்ரா வாழ்த்து மழையை பொழியவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X