நடிகரோடு 2-வது திருமணமா? வதந்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனா.. கடைசியில் அந்த வார்த்தை சிறப்பு
சென்னை: நடிகை "மீனா"வின் கணவர் "வித்தியாசாகர்" கடந்த வருடம் உடல்நிலை குறைவினால் மரணம் அடைந்த நிலையில் மீனா இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்று அடிக்கடி வதந்திகள் பரவி வருகிறது. இதனால் கோபமான மீனா இது குறித்து கடுமையான கண்டனங்கள் தெரிவித்து இருக்கிறார்.
நடிகை மீனா பற்றி அவருடைய கணவர் இறந்த ஒரு சில மாதங்களில் இருந்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கெல்லாம் மீனாவும் அடிக்கடி மறுப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் நடிகை மீனா ஒரு நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவி வர அதற்கு மீனா கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

அந்த வகையில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குறைந்த வருடங்களிலேயே கதாநாயகியாக மாறி இருந்தார். அதிலும் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்திருந்தார். நடிகர் ரஜினியோடு குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவருக்கே ஜோடியாகவும் சில வருடங்களிலே நடித்திருந்தார்.
அதுபோல சரத்குமார், விஜயகாந்த்,கார்த்திக், பிரபு தேவா, அஜித் போன்ற பல நடிகர்களோடும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் இவருடைய கண்கள் பலருடைய ஃபேவரிட். அதிலும் நாட்டாமை திரைப்படத்தில் இவருடைய நடிப்பு 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த காட்சிகள். அதே நேரத்தில் மீனா முன்னணி நடிகையாக இருந்த போது தொழில் அதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையும் சமீபத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2022 ஆம் ஆண்டு வித்யாசாகர் உடல் நிலை குறைவினால் மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் இணையத்தில் பரவ தொடங்கியது.
அதைத் தொடர்ந்து அடிக்கடி மீனா பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வர, அதற்கு மீனாவும் நான் இரண்டாவது திருமணத்தை பற்றி சிந்திக்கவே இல்லை என்று பலமுறை விளக்கம் அளித்தும் வதந்திகள் மட்டும் ஓய்ந்தபாடு இல்லை. சமீபத்தில் மீனா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று செய்தி இணையத்தில் வேகமாக பரவி விடுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த மீனா ஒரு பேட்டியில்," சமூக வலைதளத்தில் உண்மைகளை சொல்லுங்கள், அதுதான் நல்லது. நாட்டில் என்னை போல தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி என்னால் சொல்ல முடியும்?" என்று மீனா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகையாக இருந்தாலும் சரி சாதாரண ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் பற்றி சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எல்லோர் கையிலும் இப்போது செல்போன் இருக்கிறது. அதில் தாராளமாகவே நெட் பயன்பாடு இருக்கிறது.
அதை வைத்து அடுத்தவர்களின் வாழ்க்கையை விமர்சிப்பது, அடுத்தவர்களுடைய கேரக்டர்களை தகாத வார்த்தைகளால் விமர்சிப்பது தான் சிலருடைய வேலையாக இருக்கிறது. ஆனால் நம்முடைய முகம் தெரியாது என்று அடுத்தவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை அசிங்கப்படுத்துவதால் அவர்கள் உடைய குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்படும் பிரபலங்களின் மனநிலை என்னவாகும் என்பதை சிலர் யோசிக்காமல் எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











