சேரனை தொடர்ந்து முகெனின் பெயரை டேமெஜாக்கும் மீரா மிதுன்.. வைரலாகும் போன் கால்!

Recommended Video

Bigg Boss Meera Mithun Audio Leaked : போனில் மீரா மிதுன் பேசும் ஆடியோ வைரல்

சென்னை: நடிகை மீரா மிதுன் முகென் குறித்து தனது நண்பருடன் போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன், 2016ஆம் ஆண்டு தென்னிந்திய அழகியாக ஃபெமினாஸ் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இவர் அழகி போட்டிக்காக திருமணம் ஆனதை மறைத்தார். வயது குறித்து தவறான தகவலை தெரிவித்தார் என புகார்கள் எழுந்தன.

இதனை தொடர்ந்து அழகிப்போட்டி நடத்தப்போவதாக பல பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மீரா மிதுன் மீது ஏராளமான பெண்கள் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

பிரச்சனை

பிரச்சனை

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே ஹவுஸ்மேட்ஸ்களுடன் அவர் பிரச்சனை செய்தார்.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

இதனை தொடர்ந்து நாட்டாமை டாஸ்க்கின் போது, சக போட்டியாளரான சேரன், தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக பரபரப்பு புகாரை கூறினார். இந்த புகாரால் கதறி அழுதார் சேரன்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

மீராவின் புகாரால் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குறும்படம் போட்ட கமல், மீரா கூறிய குற்றச்சாட்டு பொய்யென நிரூபித்தார். இதனை தொடர்ந்து மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பழைய போட்டியாளர்

பழைய போட்டியாளர்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் மீரா மிதுனும் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

 ஒன்னா இருக்குற வீடியோஸ்

ஒன்னா இருக்குற வீடியோஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருவதற்கு முன்னதாக மீரா மிதுன், அலெக்ஸ் என்பவருடன் போனில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் ஹவுஸ்ல நானும் முகெனும் ஒன்னா இருக்குற நிறைய வீடியோஸ போடுங்க.

வாய்ஸ் ஓவரோட

நானும் முகெனும் ஒன்னா இருக்குற சீன்ஸ் எல்லாமே எடுத்து, இன்ஸ்டாகிராமில் எல்லாம் நிறைய வீடியோ போடுறாங்க அதே மாதிரி, நாங்க இருக்குற சீன்ஸ்க்கு முகெனோட பாட்ட வாய்ஸ் ஓவரா போடுங்க.

கேஷ் ட்ரான்ஸ்பர்

கேஷ் ட்ரான்ஸ்பர்

சீக்கிரமாக பண்ணுங்க இந்த வேலையை, பேக்ரவுண்ட் மியூஸிக் கொடுத்து, பாட்டு கொடுத்து நல்லா பண்ணுங்க நாளைக்கு ஃபுல்லா பண்ணுங்க, நான் சொன்னது எல்லாம் செஞ்சு முடிச்சதும் நான் உங்களுக்கு கேஷ் ட்ரான்ஸ்பர் பண்றேன் பேசினா மாதிரி. இவ்வாறு கூறுகிறார் மீரா மிதுன்.

டேமெஜ் செய்ய திட்டம்

டேமெஜ் செய்ய திட்டம்

தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள முகென் டைட்டில் வின்னராகும் வாய்ப்பில் உள்ளார். அவரை வைத்து குளிர் காய்வாதற்காக மீரா மிதுன் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறாரா? அல்லது முகெனின் பெயரை டேமேஜ் செய்ய இப்படி பேசியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

முகெனுக்கு டிரெஸ்

முகெனுக்கு டிரெஸ்

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது முகெனுடன் நெருக்கமாக பழகினார் மீரா மிதுன். ஆனால் அப்போது ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் அவரிடம் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபோதும் முகெனுக்கு டிரெஸ் வாங்கி வந்து கொடுத்தார்.

ஏற்கனவே வைரல்

ஏற்கனவே வைரல்

மீரா மிதுனின் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சேரனின் பெயரை டேமெஜ் செய்ய சொல்லி மீரா பேசிய ஆடியோவும், தனது மேனேஜரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஆடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X