For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீரியல் சூட்டிங்கில் கதறி அழுத நடிகை மோனிகா

    By Mayura Akilan
    |

    பொதுவாகவே சீரியலில் நடிக்கும் கதாநாயகிகள் துணை நாயகிகள் எல்லோருமே குடம் குடமாய் கண்ணீர் விட்டு பார்ப்பவர்களையும் கண்ணீர் விட வைப்பார்கள்.

    நடிகை மோனிகா படப்பிடிப்பில் நிஜமாகவே அழுது உடன் நடித்தவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். இவருக்கு கண்ணீருடன் மட்டுமல்ல தண்ணீருடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    மழை என்றாலே ரமணனுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வரும் மோனிகா இப்போது முழுநேர சீரியல் நடிகையாகிவிட்டார். தன்னுடைய மீடியா உலகப் பயணம், மணவாழ்க்கை, குழந்தை பற்றி அவரே கூறியுள்ளார் படியுங்களேன்.

    குயின்மேரிஸ் பொண்ணு

    குயின்மேரிஸ் பொண்ணு

    சென்னை குயின்மேரீஸ் கல்லூரியில் படிக்கும் போதே டிவியில் செய்தி வாசிக்க அப்ளை செய்தாராம். அங்கு கிடைத்ததோ தொகுப்பாளினி வேலைதான். தொடர்ந்து வானிலை அறிக்கை வாசித்துள்ளார் மோனிகா.

    காதல் திருமணம்

    காதல் திருமணம்

    வானிலை அறிக்கை வாசிக்க போன இடத்தில் காதல் மழையில் நனையவே அது திருமணத்தில் முடிந்து இப்போது அழகான குழந்தை ஜேடனுக்கு அம்மாவாகிவிட்டார்.

    சீரியல் நடிகை

    சீரியல் நடிகை

    விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு தொடரில் கல்பனாவாக நடித்து குடம் குடமாக கண்ணீர் விடுகிறார் மோனிகா. சுதாசந்திரன் மகளாக நடிக்கும் அவர், திருமணம் முடிந்து வீட்டை விட்டு போகும் காட்சியில் நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதாராம்.

    பெண் குழந்தை

    பெண் குழந்தை

    மோனிகாவிற்கு ஆண் குழந்தை இருந்தாலும் பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக கணவரின் தங்கையின் மகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறாராம்.

    சினிமாவில் வாய்ப்பு

    சினிமாவில் வாய்ப்பு

    ரௌத்திரம் படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்துள்ளார். அவ்வப்போது ரிப்போர்ட்டர் வேடத்தில் தலை காட்டியதோடு சரி. குழந்தையை கவனித்துக்கொள்ளும் அம்மா வேடமே தனக்கு நிறைவாக இருக்கிறது என்கிறார் இந்த மழைப்பெண்.

    English summary
    TV Actress Monica plays special role in Deivam Thantha Veedu on Vijay TV. She cried in Shooting spot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X