மைனா நந்தினி தம்பியின் திருமணம்.. சீர் வரிசை செய்து அசத்திய நடிகை.. தடபுடலாக நடந்த திருமணம்!

சென்னை: சினிமாவை விட ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது சீரியல்கள் தான். அதுவும் ஒரு காலத்தில் இந்த சீரியலுக்கு என்று ஒரு கூட்டமே இருந்தது என்று சொல்லலாம். அது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் தான், இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை மைனா நந்தினி, நேற்று இவர் தம்பியின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ள நிலையில், மைனா நந்தினி தனது தம்பிக்கு என்ன சீர் கொடுத்தார் தெரியுமா?

Myna Nandhini marriage car
Photo Credit:

நடிகை மைனா நந்தினி மதுரையிலிருந்து எப்படியாவது நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வாய்ப்பை தேடி அலைந்துள்ளார். பல போராட்டத்திற்கு பிறகு, சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு, சரவணன் மீனாட்சி சீரியல் தான் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த சிரியலில் மைனா கேரக்டரில் நடித்ததால் தன்னுடைய பெயரை மைனா நந்தினி என மாற்றிக்கொண்டார். அந்த சீரியலுக்கு பிறகு அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டான இவர், சினிமா வெப் சீரிஸ் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக மைனா நந்தினி நடித்திருந்தார். தற்போது, மைனா நந்தினி தனது கணவர் யோகேஸ்வரனுடன் சேர்ந்து விஜய் டிவியில் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் இருவரும் பல சாகசங்களை செய்து ஜோடியாக கலக்கி வருகின்றனர்.

Myna Nandhini marriage car
Photo Credit:

மைனா நந்தினி தம்பியின் திருமணம்: இந்நிலையில், நேற்று மைனா நந்தினியின் தம்பிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது தம்பிக்கு சீர்வரியை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் மைனாவின் கணவர் யோகேஸ்வரன், தனது மச்சானுக்கு 'BMW Bike' வாங்கி திருமண பரிசாக கொடுத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் மைனா நந்தினி தனது தம்பிக்கு, 'Mahindra 3xo' காரை திருமண பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் மதிப்பு 14 முதல் 15 லட்ச ரூபாய் ஆகும். வழக்கமாக பெண் வீட்டார் தான் சீர்வரிசை கொடுப்பார்கள். ஆனால், மைனா நந்தினி தனது தம்பிக்காக சீர் செய்து அசத்தி உள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் புது வாழ்க்கையை தொடங்க இருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X