சன் டிவி காமெடி நிகழ்ச்சியில் நடுவரான நடிகை நந்திதா
அட்டகத்தி படத்தின் நாயகி நந்திதா சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியான ஒஸ்தியில் நடுவராகியுள்ளார். மற்றொரு நடுவராக பிரபல இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்றுள்ளார்.
சன்டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒஸ்தி எனும் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் நான்கு அணிகள் கலந்து கொண்டு காமெடி செய்கின்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நகைச்சுவை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அறிமுக தொகுப்பாளினி சித்ரா ஒஸ்தியை தொகுத்து வழங்குகிறார்.
சசி, கிறிஸ்டோபர், பாலா,ஆனந்த்,வடிவேலு டேவிட் இவர்களுடன் வெங்கடேஸ் ஆகியோர் இணைந்து ஓர் அணியாக கலந்து கொண்டுள்ளனர்.

இன்னமும் எதிர்பார்க்கிறோம்
கலக்கப் போவது யாரு? அசத்தப்போவது யாரு? காமெடிக்கு நாங்க கியாரண்டி என்று நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துப் போன நமக்கு இந்த ஒஸ்தி புதிய விசயமில்லை. ஆனால் நடிகை நந்திதா நடுவராக வந்தது கொஞ்சம் புதிதாக இருந்தது.

சீனியர் நடிகைகள்
பொதுவாக சினிமாவில் வாய்ப்பு குறைந்து போன சீனியர் நடிகைகள்தான் சீரியலுக்கோ, சினிமாவிற்கோ வருவார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக வந்தது கொஞ்சம் ஆச்சரியமான விசயம்தான்.

ரசித்து சிரித்த நந்திதா
இயக்குநர் பாக்யராஜ் தன்னுடைய திரைப்படங்களில் எத்தனையோ காமெடிகளை புகுத்தி ரசிக்க வைத்தவர். அவருக்கு இந்த காமெடி அதிகம் சிரிப்பை வரவழைக்கவில்லை. ஆனால் நடிகை நந்திதா ஒஸ்தி காமெடிக்கு ரசித்து சிரித்தார்.

ஜோதிடம், டாக்டர்
பெயர் மாற்றும் ஜோதிடராக வந்த வெங்கடேஷ் குரூப், பிரசவ மருத்துவமனையில் நடித்த காமெடி குரூப், புதுப்படம் எடுக்கும் இயக்குநர்கள் என இந்த வாரம் ஒஸ்தி கொஞ்சம் பரவாயில்லைதான். அடுத்தவாரம் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications











