நிரோஷா காலுக்கு என்ன ஆச்சு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 செட்டில் தூக்கிவந்த VJ கதிர்.. நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை: விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் மூன்றாவது சீரியலாக அதிக டிஆர்பியுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் மற்றும் கோமதி தம்பதிக்கு மூன்று மகன்கள், 2 மகள்கள் இருப்பதாகவும் அவர்களின் திருமணம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை நிரோஷா. அவரது நடிப்பு இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து வருகிறது.

television nirosha pandian stores 2 serial 2


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இந்த சீரியலுக்கு அதிகமான டிஆர்பிஐ பெற்று கொடுத்து வருகிறது. சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவக்கம் முதலே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசனில் அண்ணா மற்றும் தம்பிகளின் பாசப்பிணைப்பை மையமாக வைத்து கதைக்களம் காணப்பட்ட நிலையில், தற்போது அப்பா மற்றும் மகன்களின் உறவை மையமாக வைத்து இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.

தந்தை -மகன் பாசம்: முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்த ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை சுஜிதா தனம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அப்பாவாக நடித்து வருகிறார் ஸ்டாலின். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதாகவும் மூன்று மகன்களுக்கும் அடுத்தடுத்த திருமணங்கள் நடக்கும் நிலையில் இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சீரியல் அடுத்தடுத்த காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

நடிகை நிரோஷா: இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் நிரோஷாவிற்கு தற்போது காலில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் நடக்க முடியாத நிலையிலும் சீரியலில் நடிக்க வந்துள்ளார். அவரால் நடக்க முடியாத நிலையில், சீரியலில் மூத்த மகன் சரவணனாக நடித்து வரும் விஜே கதிர், நிரோஷாவை கையில் தூக்கி வருவதாக காணப்படுகிறது. இதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரோஷா பகிர்ந்துள்ளார். மேலும் விஜே கதிரின் இந்த செயல் குறித்து அவர் உச்சி முகர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு பாடல் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு இந்த சிச்சுவேஷன் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நெகிழ்ந்த நிரோஷா: தொடர்ந்து வாழ்க்கை அவரை எந்த உயரத்திற்கு எடுத்து செல்லும் என்று தெரியாது, ஆனாலும் தன்னுடைய அம்மாவின் அன்பை இதயத்தில் எப்போதும் கதிர் சுமப்பார் என்று நிரோஷா இந்த பதிவில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் மூத்த மகனாக சரவணனாக நடித்து வருகிறார் விஜே கதிர். அவருக்கு இந்த சீரியலில் மிகவும் அமைதியான கேரக்டர். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்தான் அதிகமாக கலாட்டா செய்வார் என்று சமீபத்தில் இந்த சீரியல் டீம் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X