ஜீ தமிழின் சூப்பர் குயின் ஷோ... யாரு டைட்டிலை வின் பண்ணியிருக்காங்க பாருங்க!

சென்னை : ரசிகர்களை கவர, தங்களது சேனலின் டிஆர்பியை உயர்த்த என பல காரணங்களுக்காக ஒவ்வொரு சேனலும் மெனக்கெட்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ், கலர்ஸ், சன் டிவி போன்ற சேனல்களும் இணைந்துள்ளன.

சிறப்பான சன் டிவி

சிறப்பான சன் டிவி

ஒரு காலகட்டம் இருந்தது, சேனல் என்றால் அது சன் டிவிதான் என்ற காலகட்டம் அது. அதன் சிறப்பான பல ஷோக்கள் ரசிகர்களை கவர்ந்தது. சேனலில் ஒளிபரப்பாகும் புதிய படங்கள் உள்ளிட்டவை மூலம் ரசிகர்கள் மிகவும் சிறப்பான அனுபவங்களை பெற்று வந்தனர். அந்த விஷயத்தை முறியடித்தது விஜய் டிவி.

ரசிகர்களை கவரும் விஜய் டிவி

ரசிகர்களை கவரும் விஜய் டிவி

இந்த டிவியின் புதிய நிகழ்ச்சிகள், சிறப்பான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் முதலியவை ரூம் போட்டு யோசிப்பார்களோ என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. ரூம் போட்டு யோசித்துதான் புதிய நிகழ்ச்சிகளை அவர்கள் ரசிகர்களுக்கு கொடுத்து தொடர்ந்து டிஆர்பியில் முன்னணியில் உள்ளனர்.

சேனல்களுக்குள் போட்டி

சேனல்களுக்குள் போட்டி

ஆனால் தற்போது அதிகமான சேனல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற சேனல்களும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றன.

ஜீ தமிழின் சூப்பர் குயின் ஷோ

ஜீ தமிழின் சூப்பர் குயின் ஷோ

அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் கடந்த ஜனவரி 16ம் தேதி துவங்கியது சூப்பர் குயின் நிகழ்ச்சி. ரசிகர்களின் அதிகமான கொண்டாட்டத்திற்கு உள்ளான சீரியல் நடிகைகளை கொண்டு இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மிகவும் சிறப்பாக ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி களைகட்டி வந்தது.

டைட்டிலை வென்ற பார்வதி

டைட்டிலை வென்ற பார்வதி

நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் நடிகர் நகுல் செயல்பட்டனர். அதில் எல்லாம் வெற்றி பெற்று தற்போது டைட்டிலை வென்றுள்ளார் நடிகை பார்வதி. நேற்று நடைபெற்ற கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் இவர் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது மூன்றாவது இடங்களை தேஜஸ்வினி மற்றும் ஆயிஷா பிடித்துள்ளனர்.

பார்வதி நன்றி

பார்வதி நன்றி

பார்வதிக்கு ஏராளமான பரிசுகள் சேனல் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பார்வதி நன்றி தெரிவித்துள்ளார். இந்த பரிசை அவர் தனது பெற்றோருடன் சென்று பெற்றுக் கொண்டார். ராம்ப் வாக் உள்ளிட்டவற்றை நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் முன்னதாக செய்தனர்.

தேவயானியின் மருமகள்

தேவயானியின் மருமகள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியின் மருமகளாக நடித்து வருபவர் பார்வதி. இவர் அந்த சேனலின் விஜேவாகவும் உள்ளார். முன்னதாக சன் டிவியில் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இவர் செயல்பட்டுள்ளார். வணக்கம் தமிழா நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X