யப்பா செம ரொமான்ஸ்..கிறிஸ்துமசுக்கு இப்படியா வாழ்த்து சொல்லுவீங்க..அமீர், பாவனியை கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அமீர் மற்றும் பாவனி ஜோடி ரசிகர்களுக்கு க்யூட்டாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் ரெட்டை வால் குருவி , தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த இவர் பாதியிலேயே அந்த சீரியலை விட்டு விலகினார்.
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி ஷோவுக்குள் நுழைந்ததுமே ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

காதல் சர்ச்சை:பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ராஜூ, த்ரூட் ஆர் டேர் கேமில், அபிநய்யிடம் நீங்க பாவனியை காதலிக்கிறீங்களா என்று கேட்டு போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதன் பின், இந்த சர்ச்சை கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார்.
தனி ரசிகர்கள் கூட்டம்: ஏராளமான ரசிகர்கள் இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருந்தார் பாவனி.
பிபி ஜோடிகள்: இதைத் தொடர்ந்து பிபி ஜோடிகள் 2 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கினார்கள். ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமீர் -பாவனி ஜோடி டைட்டிலை வென்றது.
காதலை ஏற்றுக்கொண்டார்: இந்த நிகழ்ச்சியில், அமீர் பாவனி மீதான காதலை பலமுறை கூறினார். ஆனால், பாவனி அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தன்னுடைய அன்பை பகிர்வதில் எந்தக் குறையும் காட்டாமல் தொடர்ந்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் பவானி அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். தற்போது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
யப்பா செம ரொமான்ஸ்: இந்நிலையில், பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி உள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள்... யப்பா செம ரொமான்ஸ் என்றும், இந்த போட்டோவை பார்த்து கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ற மாதிரி இல்லை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











